Media

நிலைபேறான அபிவிருத்திக்கு எமது பங்களிப்பு -17

இறுதி நிலைபேறான அபிவிருத்தி இலக்கு: உலகளாவிய ரீதியில் 2030ல் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய அனைவரினதும் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. கீழுள்ள 16 நிலைபேறான சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைய உலகலாவிய ரீதியில், தேசிய, உள்ளுராட்சி மற்றும் சமூக மட்டங்களில் எல்லோரினதும் வினைத்திறனான அர்பணிப்புடனான பங்களிப்பில்லாமல் சாத்தியமாகாது. 1. வறுமையொழிப்பு, 2. பட்டினியின்மை, 3. சுகாதார மற்றும் ஆரோக்கியமான வாழ்வு, 4. தரமான கல்வி, 5. பெண்களின் சமூக வகிபாகம், 6. தூய்மையான...

சமாதான சூழலும் சமூக நீதியும் – 16

நிலையான அபிவிருத்தி இலக்குகளில், பௌதீக, பொருளாதார அபிவிருத்தி, சூழல் மற்றும் கலாச்சாரங்களின் பாதுகாப்பிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் சமூகத்தில் சமாதானமான சூழல், சமூக நீதி, வினைத்திறனான சமூக செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் மிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். எனவே தான் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் சமாதானமான மற்றும் உள்ளடக்கமான (peaceful and inclusive) சமூகங்களை ஊக்குவித்தல்¸ அனைவருக்கும் நீதியினை அணுகும் வசதியினை வழங்கல்¸ அனைத்து மட்டங்களிலும் வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகத்தன்மை...

எம்மை சூழவுள்ள வளங்களை பாதுகாத்து உயிர்பல்வகைத்தன்மையின் இழப்பினை நிறுத்துவோம் – 15

இலங்கை உலகின் பல்உயிரன வகைகளைக்கொண்ட மிக முக்கிய 35 பகுதிகளில் ஒன்றாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பிலே அண்ணளவாக 30 வீதமானவை காடுகளாகும். காடுகளை அழிப்பதும் சரியான திட்டமிடா செயற்பாடுகளுமே பல்உயிர்வகைத்தன்மை பாதிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணமாகும். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் 15வது இலக்காக எமது பூமியின் மேலுள்ள பல வளங்களினது பாதுகாப்பைப் பற்றி குறிப்பிடுகின்றது. இதில் சூழலியலின் நிலையான பயன்பாட்டினை பாதுகாத்தல்¸ மீளமைத்தல்¸ முன்னிறுத்தல் மற்றும் காடுகளை நிலைபேறாக முகாமை செய்வதுடன் பாலைவனமாதல் மற்றும் நிலம்...

கடல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாப்போம் – 14

இலங்கை ஒரு தீவாக இருப்பது, எமக்கு – குறிப்பாக கரையோரங்களில் வாழும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வளம். இலங்கையின் கடல் சார்ந்த பகுதி இலங்கையின் நிலப்பரப்பின் 8 மடங்கு என கணிப்பிடப்படுகிறது. இலங்கையை சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பிரதேசங்கள் மிக முக்கிய பொருளாதார மற்றும் வாழ்வாதார கேந்திர நிலையங்களாகும். இது இலங்கை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். குறிப்பாக மிக அதிகமான கடலை அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தின் குடியிருப்புக்களையும் மிக முக்கிய...

காலநிலை மாற்றங்களையும்¸ அதன் விளைவுகளையும் சிறந்த முறையில் எதிர்கொள்வோம் – 13

காலநிலை மாற்றத்தினை நாள்தோறும் நாம் உணர்ந்து வருகிறோம். இதில் மிக முக்கிய போக்குகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் அனுபவித்து வருகிறோம். குறிப்பாக: – மழை பருவ காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சியினால் சடுதியான வெள்ள நிலை உருவாகிறது. – மறுபுறத்தில் மழை பொழிய வேண்டிய காலங்களில் அதிக வரட்சி நிலவுகிறது. – கடந்த காலங்களை விட அதிக உஸ்னம் நிலவுகிறது. இன்னும் பல பகுதிகளில் கடந்த வருடங்களில் குளிர் காலநிலை நிலவிய...

நுகர்வு மற்றும் உற்பத்தி வழிமுறைகளை பொறுப்பு வாய்ந்ததாக மாற்றுவோம் – 12

நுகர்வு மற்றும் உற்பத்தி (Consumption and production) விடயங்கள் பல்வேறு சமூக பொருளாதார விடயங்களில் தாக்கம் செலுத்துகின்றன. நீர், உணவு, கட்டட சூழல், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா தொழில் மற்றும் கழிவு முகாமைத்துவம் என பல துறைகளில் உற்பத்தியும் நுகர்வும் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட்டால், பல்வேறு சமூக சூழல் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் ஒரு இலக்காக நிலையான...

சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் ஊடக மாநாடு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கடந்த 2019.05.19ம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் செயலாளர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் போஷகர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், உப தலைவர்களான சங்கரத்ன தேரர், மௌலவி இசட்.எம்.நதீர், போதகர் ஏ.கிருபைராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமய, சமூகங்கள் சார்பில் கருத்துரையாற்றினர்....

சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் கடந்த கல்முனையில் ஸ்தாபிக்கப்பட்டது

சமயங்களுக்கிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கான  செயற்திட்டங்கள் வெற்றியளித்த போதும் இனங்களுக்கிடையேயும் பிரதேசங்களுக்கிடையேயும் உள்ள முரண்பாடுகளும் விட்டுக்கொடுப்பின்மையும் காரணமாக  சமூகங்களுக்கிடையே பூரண சக வாழ்வை ஏற்படுத்த முடியாதுள்ளது.இச்சாவாலை எதிர்கொள்ள சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் கடந்த 30.12.2018ம் திகதி கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் வைத்து அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. அமைப்பின் நோக்கங்கள்: சமூகத்தில் நல்ல வாழ்வொழுங்கை ஏற்படுத்தல் மூலம் பல்லின ஐக்கியத்தை மேம்படுத்தல். பல்லின ஐக்கியம் மூலம் பொருளாதார, சமூக அபிவிருத்தி, ஆரோக்கியமான வாழ்வு என்பனவற்றை மேம்படுத்தல். பல்லின...