Saja will talk on ‘community resilience and sustainable development’ – A local perspective

புத்தாக்கம்: சமூக மாற்றத்திற்கும், நிலைபேறான அபிவிருத்திக்குமான சிந்தனைப் புலம்.
Innovation: Ideas for Social Change and Sustainable Development.

ஒத்த நோக்கமுடைய ஆய்வாளர்கள் இணைந்து, இந்தப் பெயரில் உருவாக்கியுள்ள இவ்வமைப்பானது, தொடர்ச்சியான நிகழ்வுகளையும் ஆய்வுகளையும் பல்வேறு பிரதேசங்களிலும் நடாத்த முன்னெடுப்புக்களை செய்துள்ளது.

அந்த வகையில் இதன் முதல் நிகழ்வு, எதிர்வரும் 24.02.2019 ஞாயிறு பி.ப. 4.00 மணியளவில், அக்கரைப்பற்று பொத்துவில் வீதியிலுள்ள ‘Mango Garden’ இல் நடைபெறுகிறது.

ஆரம்ப நிகழ்வின் தலைப்பு: “சமூக நெகிழ்திறனும் நிலைபேறான அபிவிருத்தியும்- ஒரு உள்ளூர்ப் பார்வை” (Community Resilience and Sustainable Development – a Local Perspective). வளவாளர்: Eng. சஜா ஏ.ஏ.மஜீட், தென்கிழக்கு பல்கலைக்கழக, பொறியியல் பீட விரிவுரையாளர்.

இதன் பின்னர் கலந்துரையாடலும் நிகழும். ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ளவும். ஏற்பாட்டுக் குழுவினர்.