Saja delivered a talk on “Rise of Robotics” for school students

12.04.2018

By Admin.

Eng. Aslam Saja today delivered a talk on “The need of robotics lessons in schools” at the Robotics workshop for beginners organized under the theme “Rise of Robotics”.

இலங்கை மருத்துவ மற்றும் பொறியியல் பீட பல்கலைக்கழக மாணவ அமைப்பான Renaissance through science    இனால் அண்மையில் முதலாவது Rise of robots எனும் ரொபொட்ஸ் அடிப்படை தொழில்நுட்ப ஒரு நாள் பயிற்சிநெறியொன்று கல்முனை சாஹிராக்கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கல்முனை சாய்ந்தமருது சம்மாந்துறை நிந்தவூர்  மருதமுனை பகுதியிலிருந்து இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய 60 மாணவர்கள் கலந்து கொண்டு ரொபடிக்ஸ் பல்வேறு நடைமுறை சார் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் விரிவுரையாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் தெளிவுபடுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியினை தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் அஸ்லம் சஜா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்ததுடன் விசேட உரையாளராக இயந்திரவியல் பொறியியலாளர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு ரொபடிக்ஸ் தொடர்பான தற்கால போக்குகள் தொடர்பான விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இறுதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் பொறியியலாளர் எம்.சீ.எம். மபீல் பிரதம அதிதியாகவும் சம்பத் வங்கியின் சாயந்தமருது கிளை முகாமையாளர் முஸம்மில் ஹஸைன் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர்களான பொறியியலாளர்களான அஜ்மல் ஹினாஸ் மற்றும் அஸ்லம் சஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர். இந்நிகழ்வினை அமைப்பின் தலைவர் ரௌஸின் அஸார் மற்றும் உறுப்பினர் சிஹாப் ஆகில் ஆகியோர் வழிநடத்தியதுடன் மருத்துவ பொறியயல் பீட பல்கலைக்கழக மாணவர்களான இவ்வமைப்பின் உறுப்பினர்கள் செயன்முறைப்பயிற்சியின் போது பல்வேறு தெளிவுகளை மாணவர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. பயிற்சியின் இறுதியில் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இது போன்ற பயிற்சிகளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

http://www.importmirror.com/2018/04/blog-post_305.html