மின்சாரம் மற்றும் ஏனைய சக்தி வலு (Power and Energy sector) நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் மிக முக்கிய ஒரு துறையாகும். “அனைத்து மக்களும் நிலைபேறான நவீன சக்தியினை (modern energy) பெறுதல்”, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது நிலைபேறான அபிவிருத்தி இலக்காகும். 2030களில்¸சக்திவலுக்களின் வினைத்திறனை அதிகரித்தல், மலிவான நவீன சக்தி சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், எரிபொருட் கலவையில் புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களின் பங்கை கணிசமான அளவு அதிகரித்தல், என்பன நிலைபேறான அபிவிருத்தி...
2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 89% ஆன மக்கள் பாதுகாப்பான நீரை பெற்றுக்கொள்கிறார்கள். இலங்கையின் நுவரெலியா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 65% க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாப்பான குடிநீரை பெறுகிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலேயே ஆகக்குறைந்த வீதம் பதிவாகியுள்ளது (54%). அங்கு அதிகமான மக்கள் தோட்டங்களில் வாழ்வதால் பொது நீர்மூலங்களை பாவிப்பதால் அவை பாதுகாப்பானதாக காணப்படவில்லை. பாதுகாப்பான நீர் மூலங்கள் எனும் போது அது மூடப்பட்ட கிணறுகள் (protected dug wells), குழாய்க்கிணறுகள் (tube...
இலங்கையின் மொத்த தொழிலாளர்களில் 38% ஆனோர் பெண்களாவர். எனினும் 8% வீதத்திற்கும் குறைவான பெண்களே உயர் பதவிகளை வகிக்கின்றனர். தொழில்துறைகளில் ஈடுபடுவோரிலும் அதிகமானோர் கூலித்தொழில் மற்றும் ஊதியமற்ற குடும்ப ரீதியான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாவர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக பல்லாயிரக்கணக்கான இலங்கைப்பெண்கள் பணிபுரிவதும் ஒரு பாரிய சவாலாகவே கருதவேண்டும். குடும்ப வறுமை மற்றும் சுமை காரணமாக தவிர்க்கமுடியாமல் பணிப்பெண் தொழிலைப்பெற்றுக்கொள்ளும் இவர்கள் பல பாலியல் உடலியல் வன்முறைக்குள்ளாகிவருகின்றனர். ஒரே தொழிலை செய்யும் ஆண்களுக்கு பெண்களை...
ஒரு மனிதன் தனது வாழ்நாள் பூராகவும் கற்கக்கூடியவனாக இருக்கிறான் (Lifelong learner). அது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி முறையினூடகவோ (formal education) அல்லது தனது சொந்த வாழ்நாளில் பெறும் படிப்பினைகளாகவும் (informal education) இருக்க முடியும். நாட்டின் எல்லா பிரஜைகளும் குறிப்பாக இளைஞர் யுவதிகள் அனைவரும் கல்வியறிவு (literacy) மற்றும் எண்ணறிவு (Numeracy) பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்ற மிக அடிப்படை இலக்கை அடைவது கல்வியின் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும். பொதுவாக ஒவ்வொரு மனிதனினதும் வயது வீச்சிற்கேற்ப சிறுவயதிலிருந்து...
வறுமையற்ற பட்டினியற்ற குடும்பங்கள் கிராமங்கள் நாடுகள் என இரண்டு மிக அடிப்படையான நிலைபேறான சமூக இலக்குகள் தொடர்பாக கடந்த வாரங்களில் எழுதினேன். இந்த வாரம் ஆரோக்கியமான நோய்களற்ற வாழ்வு தொடர்பான சமூக இலக்கினைப்பற்றி வெளிவருகிறது. ஒரு பிரதேசத்தின் அல்லது சமூகத்தின் எல்லா வயதுப்பிரிவுகளிலுமுள்ளவர்கள் சிறந்த உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதை உறுதிசெய்வது அவசியமாகும். அது குழந்தைகள் சிறுவர்கள் வாலிபர்கள் நடுத்தர வயதினர் மற்றும் வயோதிபர்கள் என எல்லா மட்டங்களிலும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் காணப்படுகின்றன....
பட்டினியற்ற வாழ்வு வறுமையற்ற வாழ்வைப்போன்று மற்றுமொரு இறையருள். வறுமைக்கும் பட்டினிக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொடிய வறுமை பட்டினிக்கு இட்டுச்செல்லும். ஒரு சமூகத்தில் பரம ஏழையாக வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடியவர்கள் இல்லாமலில்லை. ஒரு நிரந்தர மாத வருமானத்தை இக்காலத்தில் பெறாத, நாள் வருமானத்தில் மாத்திரம் தங்கியிருக்கும் எத்தனையோ நபர்களையும் குடும்பங்களையும் சில சமூகக் குழுக்களையும் காண்கிறோம். ஒரு பஞ்ஞ காலம் வரும்போது – உதாரணமாக வரட்சியினால் பயிர்கள் வாடி இறந்து விவாசியிகளின் வருமானம் இல்லாமலாகும் போது,...