இலங்கை உலகின் பல்உயிரன வகைகளைக்கொண்ட மிக முக்கிய 35 பகுதிகளில் ஒன்றாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பிலே அண்ணளவாக 30 வீதமானவை காடுகளாகும். காடுகளை அழிப்பதும் சரியான திட்டமிடா செயற்பாடுகளுமே பல்உயிர்வகைத்தன்மை பாதிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணமாகும். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் 15வது இலக்காக எமது பூமியின் மேலுள்ள பல வளங்களினது பாதுகாப்பைப் பற்றி குறிப்பிடுகின்றது. இதில் சூழலியலின் நிலையான பயன்பாட்டினை பாதுகாத்தல்¸ மீளமைத்தல்¸ முன்னிறுத்தல் மற்றும் காடுகளை நிலைபேறாக முகாமை செய்வதுடன் பாலைவனமாதல் மற்றும் நிலம்...
இலங்கை ஒரு தீவாக இருப்பது, எமக்கு – குறிப்பாக கரையோரங்களில் வாழும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வளம். இலங்கையின் கடல் சார்ந்த பகுதி இலங்கையின் நிலப்பரப்பின் 8 மடங்கு என கணிப்பிடப்படுகிறது. இலங்கையை சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பிரதேசங்கள் மிக முக்கிய பொருளாதார மற்றும் வாழ்வாதார கேந்திர நிலையங்களாகும். இது இலங்கை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். குறிப்பாக மிக அதிகமான கடலை அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தின் குடியிருப்புக்களையும் மிக முக்கிய...
காலநிலை மாற்றத்தினை நாள்தோறும் நாம் உணர்ந்து வருகிறோம். இதில் மிக முக்கிய போக்குகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் அனுபவித்து வருகிறோம். குறிப்பாக: – மழை பருவ காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சியினால் சடுதியான வெள்ள நிலை உருவாகிறது. – மறுபுறத்தில் மழை பொழிய வேண்டிய காலங்களில் அதிக வரட்சி நிலவுகிறது. – கடந்த காலங்களை விட அதிக உஸ்னம் நிலவுகிறது. இன்னும் பல பகுதிகளில் கடந்த வருடங்களில் குளிர் காலநிலை நிலவிய...
நுகர்வு மற்றும் உற்பத்தி (Consumption and production) விடயங்கள் பல்வேறு சமூக பொருளாதார விடயங்களில் தாக்கம் செலுத்துகின்றன. நீர், உணவு, கட்டட சூழல், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா தொழில் மற்றும் கழிவு முகாமைத்துவம் என பல துறைகளில் உற்பத்தியும் நுகர்வும் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட்டால், பல்வேறு சமூக சூழல் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் ஒரு இலக்காக நிலையான...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கடந்த 2019.05.19ம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் செயலாளர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் போஷகர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், உப தலைவர்களான சங்கரத்ன தேரர், மௌலவி இசட்.எம்.நதீர், போதகர் ஏ.கிருபைராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமய, சமூகங்கள் சார்பில் கருத்துரையாற்றினர்....
http://www.ceylontoday.lk/print-edition/2/print-more/26950 http://www.ceylontoday.lk/print-edition/2/print-more/27133 Courtesy: Ruwan Jayakody