———————————————- சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் 72 வது சுதந்திர தினம் சிறப்பு நிகழ்ச்சியானது பிரதம அதிதிகளான, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரகீப், சாய்ந்தமருது பிரதேச செயலக செயலாளர் ஐ.முகம்மட் றிகாஸ், சாய்ந்தமருது சுயேச்சை குழு தலைவரும், பெமிலி சொய்ஸ் நிறுவன உரிமையாளருமான எச்.எம். நெளபர் மற்றும் கல்முனை மின்சார சபை பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான், கல்முனை பிராந்திய கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், சாய்ந்தமருது வைத்தியசாலை...
வருடாந்த செயற்திட்டம் (#Action_Plan) தயாரிப்பதற்கான ஒன்றுகூடல் Date : 19. 01. 2020 (ஞாயிற்றுக்கிழமை)
கடந்த 19-01-2020, ஞாயற்றுக்கிழமை நடைபெற்ற இயற்கையை நேசிக்கும் மன்றத்தின்(NLF) 2020 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு திட்ட அறிக்கை தயாரிக்கும் கலந்துரையாடல் பொறியியலாளர் எ.ஏம் அஸ்லம் ஸஜா, விரிவுரையாளர், பொறியியல் பீடம் தென் கிழக்கு பல்கலைக்கழகம், தலைமையில் இனிதே நடைபெற்றது. இக் குழும கலந்துரையாடலில்இயற்கை சுற்றுச்சூழலான நீர், நிலம், வளிமண்டலம் ஆகியவற்றை பாதிக்கும் காரணிகள் அடையாளப் படுத்தப் பட்டன. இக்கலந்துரையாடலில் நீர், நில மாசுபடுத்தும் காரணிகளுக்கு முன்னுரிமையளித்து ஆலோசிக்கப்பட்டன. மன்றத்தின் செயற்பாட்டாளர்களினால் அடையாளப் படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கான காரணிகளும்...
‘பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் 72வது தேசிய சுதந்திர தின விழாவும் மரநடுகையும் சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பொது நூலக வீதி தாரைக்கேணி தோனா முன்றலில் இன்று (04) செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர்...
இறுதி நிலைபேறான அபிவிருத்தி இலக்கு: உலகளாவிய ரீதியில் 2030ல் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய அனைவரினதும் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. கீழுள்ள 16 நிலைபேறான சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைய உலகலாவிய ரீதியில், தேசிய, உள்ளுராட்சி மற்றும் சமூக மட்டங்களில் எல்லோரினதும் வினைத்திறனான அர்பணிப்புடனான பங்களிப்பில்லாமல் சாத்தியமாகாது. 1. வறுமையொழிப்பு, 2. பட்டினியின்மை, 3. சுகாதார மற்றும் ஆரோக்கியமான வாழ்வு, 4. தரமான கல்வி, 5. பெண்களின் சமூக வகிபாகம், 6. தூய்மையான...
நிலையான அபிவிருத்தி இலக்குகளில், பௌதீக, பொருளாதார அபிவிருத்தி, சூழல் மற்றும் கலாச்சாரங்களின் பாதுகாப்பிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் சமூகத்தில் சமாதானமான சூழல், சமூக நீதி, வினைத்திறனான சமூக செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் மிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். எனவே தான் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் சமாதானமான மற்றும் உள்ளடக்கமான (peaceful and inclusive) சமூகங்களை ஊக்குவித்தல்¸ அனைவருக்கும் நீதியினை அணுகும் வசதியினை வழங்கல்¸ அனைத்து மட்டங்களிலும் வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகத்தன்மை...