இலங்கை ஒரு தீவாக இருப்பது, எமக்கு – குறிப்பாக கரையோரங்களில் வாழும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வளம். இலங்கையின் கடல் சார்ந்த பகுதி இலங்கையின் நிலப்பரப்பின் 8 மடங்கு என கணிப்பிடப்படுகிறது. இலங்கையை சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பிரதேசங்கள் மிக முக்கிய பொருளாதார மற்றும் வாழ்வாதார கேந்திர நிலையங்களாகும். இது இலங்கை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். குறிப்பாக மிக அதிகமான கடலை அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தின் குடியிருப்புக்களையும் மிக முக்கிய...
காலநிலை மாற்றத்தினை நாள்தோறும் நாம் உணர்ந்து வருகிறோம். இதில் மிக முக்கிய போக்குகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் அனுபவித்து வருகிறோம். குறிப்பாக: – மழை பருவ காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சியினால் சடுதியான வெள்ள நிலை உருவாகிறது. – மறுபுறத்தில் மழை பொழிய வேண்டிய காலங்களில் அதிக வரட்சி நிலவுகிறது. – கடந்த காலங்களை விட அதிக உஸ்னம் நிலவுகிறது. இன்னும் பல பகுதிகளில் கடந்த வருடங்களில் குளிர் காலநிலை நிலவிய...
நுகர்வு மற்றும் உற்பத்தி (Consumption and production) விடயங்கள் பல்வேறு சமூக பொருளாதார விடயங்களில் தாக்கம் செலுத்துகின்றன. நீர், உணவு, கட்டட சூழல், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா தொழில் மற்றும் கழிவு முகாமைத்துவம் என பல துறைகளில் உற்பத்தியும் நுகர்வும் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட்டால், பல்வேறு சமூக சூழல் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் ஒரு இலக்காக நிலையான...
பாதுகாப்பான, சிறந்த நகரங்கள் தொடர்பான அபிவிருத்தி இலக்கில் ஆறு பிரதான அம்சங்கள் உள்ளடங்கும். வீடு/குடியிருப்பு வசதிகள்: 2030களில்¸ நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, கண்ணியமாக வாழக்கூடிய வீடு, குடியிருப்பு வசதிகள் (housing and settelments) மற்றும் அடிப்படைச் சேவைகள் (Basic services) மேம்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக சேரிகளில் வாழும் மக்களுக்கு (slum dwellers) அவர்களின் வீடு மற்றும் குடியிருப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் . நகர அபிவிருத்தி: நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புத்திட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல்....
அதிக வறுமையைப்போன்று அதிகளவிளான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அபிவிருத்தி இலக்கை அடைவதில் மிகப்பாரிய சவாலாகவே காணப்படுகின்றது. சமத்துவமின்மை எனும்போது அது பெரும்பாலும் பொருளாதார சமத்துவமின்மையை மையப்படுத்தியதாகவே அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கை போன்ற இன ரீதியான பாகுபாடுகள் அதிகமாகவுள்ள சமூக சூழலில் சமூக, கல்வி, அரசியல் ரீதியான அடிப்படை விடயங்களில் சமத்துவம் முன்னுரிமைப்படுத்தப்படுவது இன்றியமையாததாகிறது. உதாரணமாக, சமத்துவமின்மையை நீக்க அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கப்படுவதும், சமமான சேவைகள் பெறும் வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவதும் மிக முக்கியமாகும்....
ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது நிலைபேறான அபிவிருத்தி இலக்காக உறுதியான உட்கட்டமைப்பினை கட்டியெழுப்புவதுடன் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான தொழில் மையமாக்கத்தினையும் புத்தாக்கத்தையும் வளர்த்தல் அமைந்துள்ளது. இவற்றில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த தரம் வாய்ந்ததாக மேம்படுத்தல் என்ற இலக்கை பொருத்தவரையில், அண்மைய அபிவிருத்தி திட்டங்களில் நீண்ட கால நிலையான அபிவிருத்தி நோக்கங்களின் அடிப்படையில் கட்டடக்கலை கலந்த நகரங்கள் உருவாக்கப்படவில்லை. குறிப்பாக இலங்கையில் காணப்படும் 23 மாநகர சபை பிரதேசங்களில் அதீத சனத்தொகை அடர்த்தியின் காரணமாக அப்பிரதேச கட்டடங்களும்...