A book on SDGs and challenges in Tamil
கலாநிதி அஸ்லம் சஜாவின் “நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்” புத்தக வெளியீடு.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரான, பொறியியலாளர் கலாநிதி அஸ்லம் சஜா அவர்களின் “நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்” எனும் புத்தகம் பேஜஸ் புக்ஹவூஸ் பதிப்பகத்தினால் அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சி கொண்டாட்டத்தில் வெளியீட இருக்கிறது. இவர் இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் பிரதான செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிட தக்கது.
கலாநிதி அஸ்லம் சஜா சமூக அபிவிருத்தி, மனிதாபிமான உதவி, திட்ட முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைசார் விடயங்ளில் 10 வருடங்களுக்கு மேல் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவை தொடர்பான 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் இடம்பெற்ற மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்குபற்றியுள்ளதோடு, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச் சஞ்சிசைகளில் பிரசுரித்துள்ளார். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் தொடர்பான துறைகளில் பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் ஒரு புலமையாளராகவும் வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான – கொள்கை ரீதியான சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கும் வகையில் தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே எனலாம். இந்நூல் தேசிய மற்றும் பிராந்திய அரசியல் பிரதிநிதிகள். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள். அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங் களில் தொழில் புரியும் உயர் மற்றும் இடைநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், சமூக தலைமைகள் போன்றோருக்கும், பொதுவான வாசிப்பு ஆர்வலர்களுக்கும் மிகவும் பயன்மிக்கது.