முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி வீதம் குறித்து…
அஸ்லம் ஸஜா (BSc Eng, MSc Eng)
கல்வி அமைச்சருக்கு ஒரு மடல் என்ற தலைப்பில் ஜனவரி 08 2013 விடிவெள்ளியில் வெளியான கலாநிதி மௌலவி எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் எழுதிய கட்டுரை பற்றிய ஒரு கவனயீர்ப்பு இது…
முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி
அக் கடிதத்தில் பிரசுரிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலும் 2011ம் ஆண்டிற்கான (2010/2011 கல்வியாண்டு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட உத்தியோகப10ர்வ புள்ளி விபரத்தின் படியும் 2010/2011 கல்வியாண்டிற்கான முஸ்லிம் பல்கலைக்கழக அனுமதி 1637 ஆகும். இவ்வனுமதி எண்ணிக்கை 2008/2009 இல் 1336 ஆகவும் 2009/2010 இல் 1487 ஆகவும் இருந்தது.
இதன் படி 2008/2009 இல் இருந்து 2009/2010 ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி அதிகரிப்பு வீதம்
எனவே கடந்த 3 வருடங்களுக்குள் (2009-2011) சராசரி வருடாந்த அதிகரிப்பு வீதம் 10.7% ஆகும். எனவே கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டிய அதிகரிப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது வாசிப்பாகும்.
முஸ்லிம்களின் 2010/2011 ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி மொத்த பல்கலைக்கழக அனுமதியில் 7.5ம% என்பது சரியான தரவாகும். எனினும் 2009 இலிருந்து 2011 ம் ஆண்டிற்கான அதிகரிப்பு 1.1% (7.5 – 6.4) என்பது கட்டுரையாளரின் பிழையான கணிப்பாகும்.
அதே வேளை முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாக கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறார்கள் என்பது பல்வேறு அவதானங்களின் ஊடாகவும் ஒரு சில மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவும் சொல்லப்படுகின்ற விடயமாக இருந்த போதிலும் ஒரு சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கான எல்லா வகையான குறிகாட்டிகளையும் (Indicators) உள்ளடக்கியதற்கான ஆய்வுகள் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. கல்வி முன்னேற்றம் என்பது பல்கலைக்கழக அனுமதி மட்டுமல்ல. அது ஒரு அளவு கோல் மட்டுமே. அது ஒரு முக்கியமான அளவு கோல் என்றாலும் இது தவிர வேறு பல அளவு கோல்களையும் இணைத்தே கல்வி முன்னேற்றம் பற்றி அளவிட வேண்டும்.
ஏனெனில் பொதுவாக இலங்கையில் உயர்கல்வி குறியீடுகளை நோக்கும் போது 60 வீதமான A/L எழுதும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதியாக இருந்தும் 15ம% – 17% மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் காணப்படவில்லை என்பதை 1980 களிலிருந்து இன்று வரை வெளியான புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
2010/2011 ம் ஆண்டிற்கான தரவுகளைப் பார்க்கும் போது 142516 மாணவர்கள் தகுதி பெற்றும் 22016 மாணவர்களே அதாவது 15.45% மானோரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 148516 என்ற மொத்தமாக A/L பரீட்சை எழுதுபவர்களில் 9.4% மாணவர்களே 2011ல் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது தரவுகளிலிருந்து பெறக்கூடியதாகவுள்ளது.
எனவே மிகுதியான 90.6% வீதமான மாணவர்களினதும் அல்லது அதிலும் பல்கலைக்கழகத்தில் தகுதி இருந்தும் அனுமதி கிடைக்காத 100,500 மாணவர்களின் நிலை என்ன? இது பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றவர்களிலும் பார்க்க 5 மடங்கு அதிகமாகும். எனவே பல்கலைக்கழக அனுமதி என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமான பிரச்சனை அல்லாமல் அது ஒரு தேசிய ரீதியாக கல்வி தொடர்பான சரியான கொள்கைகளையும் இன ரீதியான பாகுபாடின்றிய சமமான வளப்பங்கீட்டினையும் வேண்டி நிற்கும் தீர்வுகளுடன் தீர்வுகளுடன் தொடர்பான பிரச்சனையாக முன்வைப்பதும் பொருத்தமாகும்.
விஞ்ஞானத் துறை (science stream) யை பொறுத்தவரையில் இதுவும் இலங்கையின் உயர்கல்வி கொள்கை (Higher education policy) தொடர்பான விடயமாகவே காணப்படுகிறது. 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார நிலை (Sri Lanka state of economy ) என்ற Institute of Policy Studies (IPS) இனால் வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து சில ஆய்வு முடிவுகளை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
உதாரணமாக சிங்கப்ப10ரின் உயர்கல்வியுடன் இலங்கையின் உயர்கல்வி நிலையை ஒப்பிடும் போது சிங்கப்ப10ரில் 30 வீதமான உயர்கல்விக்கான அனுமதி பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞானமாக காணப்படும் அதே வேளை இலங்கையில் 30 வீதத்திற்கும் அதிகமான அனுமதி கலைத்துறை சார்ந்ததாக காணப்படுவதாக ஆய்வொன்று குறிப்பிடுகிறது.
வரைபு 01
(மூலம் Making Everyone work for Creativity and Winning Force, N. Arunathilake, October 2011, IPS)
அத்தோடு 2010/2011 ம் கல்வியாண்டில் இலங்கை பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட கலை மற்றும் வர்த்தகத்துறை மாணவர்களின் எண்ணிக்கையுடன் (11940) விஞ்ஞானத்துறை மாணவர்களின் எண்ணிக்கையையும் (10076) கிட்டத்தட்ட சமமாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது மட்டுமல்லாமல் கலை மற்றும் வர்த்தகத்துறைகளில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை விஞ்ஞானத்துறைகளை விட மிகவும் அதிகமாகும்.
வரைபு 02
மேற்குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையிலேயே அந்நிலைக்கான அந்நிலைக்கான காரணங்களின் பின்னணியிலேயே முஸ்லிம்களின் விஞ்ஞான துறையின் அனுமதி பற்றி நாம் பேச வேண்டி இருக்கிறது.
இக்காரணத்தை A/L ல் அதிகமான மாணவர்கள் விஞ்ஞானத் துறையை விட கலை மற்றும் வர்த்தகத்துறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற ஒரு காரணிக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. இது இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் எத்தனை பாடசாலைகள் தரமான விஞ்ஞானத்துறை வகுப்புகளையும் அதற்கான ஒரு வசதிகளையும் (Infrastructure Facilities and Resources) கொண்டுள்ளது என்பதோடும் தொடர்பு பட்டது.
இலங்கையில் காணப்படும் பாடசாலை தரவுகளின் படி 10 வீதமான இரண்டாம் தர பாடசாலைகளே A/L விஞ்ஞான வகுப்புகளை (12-13ம் ஆண்டு) கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இப்பாடசாலைகள் எந்த மாவட்டங்களில் அதிகமாக அமைந்துள்ளன அவற்றிற்கு ஒதுக்கப்படும் வளங்கள் போதுமானவையா என்ற காரணிகளும் இவ்விடத்தில் கருத்தில் கொள்ளப்பட்டே இப்பிரச்சினை நோக்கப்பட வேண்டும்.
2010ம் ஆண்டு தரவுகளின் படி அதிகமான A/L விஞ்ஞானத் துறை வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றன. கொழும்பில் A/L விஞ்ஞானத் துறை கொண்ட பாடசாலை 10km2 க்கு ஒன்று என்ற ரீதியிலும் இது கம்பஹாவில் 25km2 க்கு ஒன்றுமாக காணப்படகின்றது. இது தவிர கொழும்பில் 11 வீதமான பாடசாலைகளே விஞ்ஞானத் துறை வகுப்புகளை கொண்டிருக்கவில்லை.
எனவே ஏனைய மாவட்டங்களுக்கும் A/L விஞ்ஞானத் துறை பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய கொழுப்பு போன்ற மாவட்டங்களில் வழங்கப்படும் அதே வசதிகளுடன் உருவாக்கப்படுவது இன்றியமையாததாக காணப்படுகிறது.
தேசிய ரீதியாக இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும் அதே வேளை முஸ்லிம்களின் உயர்கல்வியில் விஞ்ஞானத்துறை தொடர்பான தெளிவான ப10ரணமான ஆய்வு தேசிய ரீதியாக அவசியமாகின்றது. இது பல கேள்விகளுக்கு விடையாக எமது சரியான நிலையை புரிந்து கொள்ள உதவும்.
உதாரணமாக இலங்கை சனத்தொகை பரம்பலின் படி முஸ்லிம்கள் எண்ணிக்கை அடிப்படையில் 2ஆம் 3ஆம் இடங்களாக கொழும்பும் கண்டி மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அங்கேயே அதிகமான A/L விஞ்ஞானத் துறை பாடசாலைகளும் காணப்படுகின்றன என்பதை எமக்கு தரவுகள் காட்டுகின்றன.
எனவே இப்பிரச்சினை A/L விஞ்ஞானத் துறைகளில் முஸ்லிம் மாணவர்களின் உள்ளீடு அத் துறைகளை கொண்ட பாடசாலைகளில் அனுமதி பெறல் எல்லாப் பாடசாலைகளுக்கும் காணப்படுகின்ற சமமான வளப்பங்கீடு இவற்றுக்கு மேலாக இத்துறையில் முஸ்லிம் மாணவர்கள் காட்டும் ஆர்வம் இத்துறை பற்றிய முஸ்லிம் சமூகத்தின் மனப்பாங்கு போன்ற பல காரணிகளில் தங்கியுள்ளது.
இதில் இன்னொரு விடயம் பொறியியல், கட்டடக் கலை, தகவல் தொழில்நுட்பம், சட்டம் என்ற 4 துறைகளையும் தவிர பொதுவாக இலங்கையில் ஏனைய அனைத்து துறைகளிலும் பல்கலைக்கழக மாணவர்களில் 50% க்கும் அதிகமானோர் பெண்களாவர். எனவே குறிப்பாக மேற்குறிப்பிட்ட 4 துறைகளிலும் முஸ்லிம் மாணவர்களின் வீதம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இத் துறைகளில் முஸ்லிம் சமூகத்தில் தற்போதைய நிலை மற்றும் எவ்வாறு முஸ்லிம் சமூகம் இத் துறைகளில் தமது பிரவேசம் பற்றி நோக்குகிறது என்பது பற்றிய ப10ரண ஆய்வும் அவசியமாகிறது.
எமது சமூகத்தில் மாணவிகளும் பெற்றோரும் இவ்வாறான துறைகளுக்கு மாணவிகளை கற்பிப்பதில் உண்மையாக ஆர்வம் காட்டகின்றனரா அல்லது கலைத்துறையில் மாணவிகளை கற்பித்து தாம் வாழும் ஊரில் வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசாலையில் அல்லது அரச நிறுவனமொன்றில் ஆசிரியராக அல்லது இலிகிதராக தொழில் செய்தால் போதுமாகாது என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அந்த மனப்பாங்கில் தமத உயர் கல்வி தேர்வுகளை மேற்கொள்கின்றார்களோ என்ற கேள்விகளுக்கும் தெளிவான விடை அவசியமாகிறது.
இத் துறைகளில் எமது பங்களிப்பு பற்றிய சரியான புரிதலும் அவை தொடர்பான சமூக ரீதியான தெளிவும் விழிப்புணர்வ10ட்டலும் அவசியம் என்பதையே எமது அவதானிகள் காட்டுகின்றன. இது பற்றிய தெளிவான நிலைப்பாடு எமது சமூகஃகல்வியில் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட வேண்டும்.
எனவே உயர்கல்வி தொடர்பாக பல்கலைக்கழக அனுமதி தொடர்பான புள்ளிவிபரங்களை மாத்திரம் கொண்டு அவ் வரையறையினுள் மாத்திரம் நின்று எமது முடிவுகளுக்கு வருவதை விடவும் ஒரு ப10ரண ஆய்வு மூலம், எமது கல்வி தொடர்பான நிலைப்பாடுகளை பரிப10ரணமாகவும் தெளிவாகவும் முன்வைக்க வேண்டிய நிலைக்கு எமது ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் முயற்சிக்க வேண்டும்.
இதிலும் மிக முக்கியமாக சமூக கல்வி சார் துறைகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆய்வு முயற்சிகளை முன்னெடுக்க பல வழி முறைகளிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். சமூக நிறுவனங்களும் இதற்கு முன்வர வேண்டும்.