கல்முனை மாநகரசபை 2
இலங்கை முஸ்லிம்களுக்கு முகவரி எழுதிய மர்ஹ{ம் எம். எச். எம். அஸ்ரப் அவர்கள் உருவாகிய மண்னை பார்த்து இலங்கை வெற்கித்தலை குனிகிறது.
இலங்கை முஸ்லிங்களின் வரலாற்றிலே பல கரும்புள்ளிகளுக்கும் அநியாயங்கள் ஊழல்களுக்கும் காரணமாக இருந்த இருக்கின்ற முஸ்லிம் உரிமைக்கட்சிகள் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதன் விளைவே இன்றைய நிலை.
இந்தக்கட்சிகளை முஸ்லிம் சமூகத்திலிருந்து பிடுங்காத வரை எந்த உள்ளுராட்சி கோரிக்கையும் நியாயத்தையும் எதிர்கால சமுகத்திற்கான விடிவையும் தரப்போவதில்லை.
சரியான நியாயமான சமூக அரசியல் செயற்பாடுகளை இணங்கண்டு அவற்றை முன்னிறுத்தி எமது அரசியல் தலைவர்களும் கட்சிகளும் முன்னெடுத்திருந்தால் இந்தப்பிரதேசவாதத்தையும் இனத்துவஅரசியலையும் தாண்டி அரசியல் அதிகாரம் தானாகவே வந்திருக்கும். அல்லது அதிகாரப்பிரிற்பிற்கான தேவைதான் வந்திருக்காது.
பிரதேச அதிகாரத்திற்கான போராட்டம் நியாயமான ஊழலற்ற சமூக நீதியை நிலைபெறச்செய்வதற்கான போராட்டமாக இக்கட்சிகள் ஆரம்பித்திருக்குமேயானால் அது இந்தப்பிரிவினைக்கும் இழுபறிகளுக்கும் வடுக்களுக்கும் இட்டுச்சென்றிக்காது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடியுமென்றால் ஏன் கல்முனை மாநகரத்தில் ஆட்சியமைக்க முடியாது. எமது தற்போதைய அரசியல் தலைமைகளிடமும் கட்சிகளிடமும் நாம் எந்த ஒரு சீரான கொள்கைகளையோ செயற்பாடுகளை காணமுடியாது. புதிய வட்டார தேர்தல் முறையில் எல்லா வட்டாரங்களுக்குமான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்முனை மாநகரசபையிலுள்ள 24 வட்டாரங்களுக்கும் ஒவ்வொருவர் தெரிவுசெய்யப்படுவதால் இது உறுதிப்படுத்தப்படுகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அனைத்து பிரதேசங்களுக்கும் சமமான வளப்பங்கீடு அதன் தேவையைக்கொண்டு செய்யப்படுவதே நீதியான சமுக அரசியலின் அடிப்படை. கடந்த கால அத்தனை மாநகரசபைதேர்களிலும் முஸ்லிம் கட்சிகள் வெற்றிபெற்றும் மேயர் பதவிகள் வகித்தும் அனைத்து பிரதேசங்களுக்குமான நீதியான நியாயமான தேவைக்கேற்றவாறு வளங்களை கொண்டுவருவதில் கவனம்செலுத்தாது இருக்கின்ற சொற்ப வளங்களை தனது வாக்குவங்கிக்கு மாத்திரம் வளங்கியதன் விளைவை சாய்ந்தமருதில் ஏற்பத்திய தற்போதைய நகர்வில் கண்டுகொண்டோம். சாய்ந்தமருது கல்முனைக்குடி மருதமுனை நற்பட்டிமுனை மற்றும் தமிழ் மக்கள் எல்லோரையும் கல்முனை பிரதேச மக்கள் என்ற வடிவில் சம அந்தஸ்தில் வைத்து அரசியல் தலைமைகளும் மாநகர மேயரும் நிர்வாகம் செய்வதைவிட்டுவிட்டு பிரதேசவாதத்தை தூண்டி தனது அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள முயன்றதன் விளைவை இப்போது அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள். அடுத்த தேர்தல் இதற்கான தேவையை மேலும் வலுப்படுத்தும். இவ்வளவு நடந்தும் தற்போது யார் மேயர் எந்த ஊர்; மேயரைக்கைப்பற்றுவது அல்லது எந்த ஊருக்கு மேயரைக்கொடுப்பது போன்ற அதிகாரப்பசியை இன்னும் வலுப்படுத்தி தனது சமுகத்தின் பிரிவினையில் குளிர்காய்வதையே எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர கல்முனை மாநகரசபையை அதனுள் வாழும் எல்லா பிரதேசங்களை சமமாக வளப்படுத்துவதையும் இரண்டு சமுகங்களுக்குமான தேவைகள் என்ன என்பதை யாரும் கலந்துரையாடவில்லை. அடுத்த தேர்தலில் யார் ஆட்சியமைத்தாலும் இந்த விடயங்களை நாங்கள் கலந்துரையாடதவரை எமது அரசியல் அதிகாரம் எந்த விடிவையும் தரப்போவதில்லை. மாறாக பிரிவினைகளையே ஏற்படுத்திக்கொண்டிருக்கும். உள்ளுராட்சி அதிகாரங்கள் எவ்வாறு போனாலும் மாகாண சபையிலும் பாராளமன்ற தேர்தலிலும் கல்முனை ஒரு தொகுதி என்பதை மறந்து விடமுடியாது.