மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்
அம்பாரை மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு 08.12.2021 நடைபெற்றது.
இப்பிராந்தியத்தில் கடற்றொழில் மீன்பிடியை நிரந்தர வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்ற மீனவர் சமூகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுகின்ற நிகழ்வாக இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. இதற்கமைவாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்ற சந்தர்ப்பத்தில் அங்கு ஏற்படுகின்ற ஆபத்துகளில் இருந்து மீள்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இது தொடர்பான போதியளவு பயிற்சிகள் இல்லாததினால் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் இங்கு சுட்டி காட்டினார்கள்.
இந்த நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளா்கள், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், அம்பாறை கரையோர துறை பிரதேச மீனவா்கள் சங்கங்களின் பிரதிநிதிகள்இ அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடற்றொழில் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான இப்பிரச்சினைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துயாடிய பின்னர் சாதகமான முடிவுகள்
மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளினால் இங்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.