எம்மை சூழவுள்ள வளங்களை பாதுகாத்து உயிர்பல்வகைத்தன்மையின் இழப்பினை நிறுத்துவோம் – 15

இலங்கை உலகின் பல்உயிரன வகைகளைக்கொண்ட மிக முக்கிய 35 பகுதிகளில் ஒன்றாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பிலே அண்ணளவாக 30 வீதமானவை காடுகளாகும். காடுகளை அழிப்பதும் சரியான திட்டமிடா செயற்பாடுகளுமே பல்உயிர்வகைத்தன்மை பாதிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணமாகும்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் 15வது இலக்காக எமது பூமியின் மேலுள்ள பல வளங்களினது பாதுகாப்பைப் பற்றி குறிப்பிடுகின்றது. இதில் சூழலியலின் நிலையான பயன்பாட்டினை பாதுகாத்தல்¸ மீளமைத்தல்¸ முன்னிறுத்தல் மற்றும் காடுகளை நிலைபேறாக முகாமை செய்வதுடன் பாலைவனமாதல் மற்றும் நிலம் தரமிழத்தல் என்பன உள்ளடங்கும்.

1. நிலம்¸ உள்நாட்டு நன்னீர் R+ழல் தொகுதிகளும் முக்கியமாக காடுகள்¸ ஈர நிலங்கள்¸ மலைகள் மற்றும் வரண்ட நிலங்கள் அவற்றின் பயன்பாடுகளினதும் பாதுகாப்பு¸ மறுசீரமைப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்,

2. அனைத்து வகையான காடுகளினதும் நிலைபேறான முகாமைத்துவத்தை அமுல்படுத்தல்., காடழிப்பை தடுத்தல்¸ ஆகியவற்றோடு தொடர்ச்சியாக காடு வளர்த்தல் என்பனவும் உள்ளடங்கும்,

3. பாலைவனமயமாக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்¸ வளமிழந்த நிலங்களை மீளப்பெற்று வளமுடையதாக மாற்றுதல்¸ வரட்சி மற்றும் வெள்ளத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளடங்கலாக வளமிழப்பு அற்ற நடுநிலையான உலகத்தை உருவாக்குதல்,

4. மலைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தபடுவதன் மூலம் அபிவிருத்திக்கான சாதக பலன்களை அவை வழங்கும் திறன் அதிகரிக்கப்படும்

5. இயற்கை வாழ்விடங்களின் தரத்தை இழக்காமல் உயிரியல் பல்வகைமையின் இழப்பைக் குறைத்து அச்சுறுத்தலான இனங்களின் அழிவைத் தடுக்க வேண்டும்.

காடுகள் அழிக்கப்படுவதற்கும் அழிவதற்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றில் பிரதானமாக சனக்குடியேற்றம் விவசாய மற்றும் ஏனைய பொருளாதார அபிவிருத்தி தொழிற்சாலைகள் அமைத்தல் நெடுஞ்ஞாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளல் போன்ற பல செயற்பாடுகள் உள்ளடங்கும். தொடர்ச்சியான சனத்தொகை அதிகரிப்பு நகரமயமாக்கல் உட்கட்டமைப்பு விஸ்தரிப்பு என பல காரணிகள் காடுகளின் பரப்பை தொடர்ந்தும் குறைத்துக்கொண்டு வருகின்றன.

இவை தவிர யானைகளினால் மனிதர்களுக்கும் விவசாயம் மற்றும் வீடுகளுக்கும் ஏற்படும் பாதிப்புக்களும் அதிகரித்து வருகின்றன. இவை தவிர யானைகளினால் மனிதர்களுக்கும் விவசாயம் மற்றும் வீடுகளுக்கும் ஏற்படும் பாதிப்புக்களும் அதிகரித்து வருகின்றன. 2014 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் 715 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் யானைகளின் தாக்கத்தினால் 215 மனிதர்கள் உயிரழந்துள்ளதாகவும் 4000 க்கும் மேற்பட்ட சொத்திழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் அதிகளவிளான இழப்புக்கள் வட மேல் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் பல கிராமங்கள் நகர்ப்புறங்களாக மாறிவருவதும் நகர்ப்புறங்கள் மிகப்பாரிய நகரங்களாக மாறிவருவதும் பாரிய நில நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. சரியாக திட்டமிடப்படாத நகரங்களினால் சரியாக சுவாசிப்பதற்கு கூட இடவசதியற்ற நிலையில் எதிர்காலத்தில் பல சூழல் தாக்கங்கள் ஏற்பட முடியும். இலங்கையின் பல நெரிசலான நகரங்களில் அடிப்படை வசதிகளுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பல நாளாந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகள் சரியாக செய்யப்படவில்லை.

குறிப்பாக கரையோர நகரிங்களில் பாரிய நிலத்தட்டுப்பாடு ஏற்பட்டு நிலங்களுக்கான பெறுமதி வருடம்தோறும் மிக அதிகமாகிக்கொண்டே செல்கிறது. கிடையான அபிவிருத்தியிலிருந்து (Horizontal infrastructure development) மேல்நோக்கிய அபிவிருத்தியை (Vertical development) நோக்கிய கலாச்சாரத்திற்கு அதிகமான கிராமங்களும் நகரங்களும் இன்னும் பழக்கப்படவில்லை. கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் பெரியளவிளான அடுக்கு மாடி குடியிருப்புக்களை காண்பது மிகக்குறைவு.

ஏனைய நாடுகள் நிலப்பற்றாக்குறையான நகரங்களில் பல புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகர்ப்புறங்களுக்கு பொருத்தமான வீட்டுத்தோட்டங்கள் வாகன தரிப்பிடங்கள் பொழுதுபோக்கு பகுதிகள் என்பன பல அடுக்கு மாடி தொடர்களில் உருவாக்கப்பட்டு ஏனைய நிலம் விசாலமாக வெற்று தோட்டங்களாக விடப்படுகின்றன. குறிப்பாக வெப்ப காலங்களில் இதன் மூலம் ஏற்படும் உஸ்னத்தின் அளவை குறைக்க முடியும்.  ஆகக்குறைந்தது புதிதாக உருவாக்கப்படும் குடியிருப்புக்கள் இவ்வாறான புதிய கட்டடக்கலை நிபுணத்துவத்தின் மூலம் வடிவமைக்கப்படுவது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய சவால்களிலிருந்து நாம் விடுபடமுடியும். இவை தவிர யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இன்னும் பல ஏக்கர்கணக்கான நிலங்கள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. இவற்றிற்கான தீர்வுகளும் விரைவுபடுத்தப்படவேண்டும்.

மனித வாழ்விற்கு நிலத்தில் காணப்படும் பல்வேறு வகையான வளங்களும் மிக அத்தியாவசியமானவை. நிலத்தின் தன்மைகளும் பல்வேறுபட்டவை. இலங்கையை பொறுத்தமட்டில் ஏனைய பகுதிகளை விட மத்தியமலை சார்ந்த பகுதிகளின் காலநிலை வித்தியாசத்திற்கேற்ப பொருளாதார விவசாய நடவடிக்கைகளும் வேறுபட்டவை.

மனித வாழ்விற்கு நிலத்தில் காணப்படும் பல்வேறு வகையான வளங்களும் மிக அத்தியாவசியமானவை. நிலத்தின் தன்மைகளும் பல்வேறுபட்டவை. இலங்கையை பொறுத்தமட்டில் ஏனைய பகுதிகளை விட மத்தியமலை சார்ந்த பகுதிகளின் காலநிலை வித்தியாசத்திற்கேற்ப பொருளாதார விவசாய நடவடிக்கைகளும் வேறுபட்டவை.