சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம் [Youth Environmental Leadership and Innovation]

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு A.R. Munsoor Foundation அனுசரணையில்

“சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான விழிப்புணர்வு (13) சனிக்கிழமை நடைபெற்றது.

+++++++++++++++++++++

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் (13) சனிக்கிழமை யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா மற்றும் A.R.Munsoor Foundation அமைப்பின் அனுசரனையில் சர்வதேச தொண்டுநிறுவனமான YES Hub Sri Lanka and 10 Billion Strong நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் பிரதான வளவாளராகவும் இந் நிகழ்சித் திட்டத்தின் பிராதானியான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் எம்.ஏ சஜா அவர்களின் வழிகாட்டலில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இவ் நிகழ்சியில் பிரதம அதிதியாக இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் கெளரவ உறுப்பினரும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதீக செயலாளாருமான ஏ.எல்.எம் சலீம் மற்றும் விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம் ஆஸீக் கௌரவ அதிதிகளாக முன்னால் கொழும்பு பல்கலைக்கழகத்தினுடைய சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம் சதாத், சிரேஷ்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளரும் அறம் தொலைக்காட்சியின் பிரதான தலைமை அதிகாரியுமான எஸ்.டி ரொசன் அஷ்ரப், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கா நாட்டுக்கான தூதரகத்தின் உத்தியோகத்தர் நௌஷாட் ஏ ஜப்பார், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பொறுப்பாளர் எம். எஸ். எப். ஸாமிர் மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான வளவாளர்களாக கலந்து கொண்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் எம். என். ஏ. ஹினாஸ்,

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட விரிவுரையாளர் பொறியியலாளர் என். டி. எம். சாஜித் ஆகியோறும் கலந்து கொண்டு நிகழ்சியில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு விரிவுரைகளை வழங்கினார்கள். மேலும் Youth Alliance Sri lanka அமைப்பின் தலைவர் ZM.Zajeeth உட்பட A.R.Munsoor Foundation இன் இலங்கைக்கான நிறைவேற்று குழு உறுப்பினர் Samly மற்றும் அறம் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களான Rowsin,Aathif,Sajath ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சிப் பட்டறையில் பல் வேறு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதுடன் இறுதியில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற சர்வதேச தரம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் எமது பிராந்தியத்தில் வழங்குவதாக A.R.Munsoor Foundation இன் ஸ்தாபக தலைவி சட்டத்தரணி Maryam Munsoor Naleemudeen அவர்கள் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வுக்கு ARaM TV ஊடக அனுசரணையை வழங்கியது.

https://fb.watch/f5dS1LErka/