நவீன வினைத்திறனான சக்தி வலுவே எதிர்காலத்தின் தேவை – 07
மின்சாரம் மற்றும் ஏனைய சக்தி வலு (Power and Energy sector) நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் மிக முக்கிய ஒரு துறையாகும். “அனைத்து மக்களும் நிலைபேறான நவீன சக்தியினை (modern energy) பெறுதல்”, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது நிலைபேறான அபிவிருத்தி இலக்காகும். 2030களில்¸சக்திவலுக்களின் வினைத்திறனை அதிகரித்தல், மலிவான நவீன சக்தி சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், எரிபொருட் கலவையில் புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களின் பங்கை கணிசமான அளவு அதிகரித்தல், என்பன நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
சக்தி வலு தொடர்பான அபிவிருத்தி இலக்குகளில் மிக முக்கியமானது மின்சாரமாகும். இலங்கையின் அனைத்து பிரதேசங்களும் மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய பகுதிகளாக காணப்படுகின்றன. இலங்கை மின்சார சபையின் கிராமங்களுக்கு மின்னினைப்பை கொண்டுசெல்லுதல் திட்டத்தினூடாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நூறு வீதமான வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குதல் என்ற இலக்கு தற்போது எய்தப்பட்டுள்ளது. மின்சாரம் தவிர பெற்றோல் டீசல் மண்ணென்னை நிலக்கரி விறகு போன்ற பல வடிவங்களில் சக்தி வலு பெறப்படுகின்றன. இவை வீடுகள், வியாபார நிலையங்கள், தொழிற்சாலைகள் போக்குவரத்து மற்றும் விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 37 வீதம் வீடுகளிலும், 34 வீதம் வர்த்தக நிலையங்களிலும், 27 வீதம் தொழிற்சாலைகள், ஒரு வீதம் மதஸ்தலங்களிலும், மற்றைய ஒரு வீதம் தெருக்களை ஒழியூட்டுவதற்கும் பாவிக்கப்படுகின்றன. அதிகரித்து செல்லும் மின்சார தேவைகளை பூர்த்திசெய்வதற்காக புதிய மின் உற்பத்தி வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது. நீரின் மூலம் மின் உற்பத்தி முழுமையாக்கப்பட்ட நிலையிலும், பெற்றோலியத்தின் விலை அதிகரிப்பினாலும், நிலக்கரி மூலமான இலாபமான மின் உற்பத்தி வழிமுறை உள்வாங்கப்பட்டது. நாட்டின் வரட்சி காலப்பகுதி தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைவதனால் பெற்றோலிய மற்றும் நிலக்கரி மின்உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனினும் R+ழலிற்கு தீங்கேற்படுத்தும் வழிமுறைகளுக்கு தொடர்ந்தும் மக்கள் எதிh;ப்பு அதிகரித்தமையினால் R+ரிய சக்தி, கடல்நீர், மற்றும் காற்றின் மூலமான மின் உற்பத்தியை அதிகரிக்க அரசிற்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் அதிகரித்தவண்ணமுள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் மின்வலு மற்றும் சக்தி தேவையை பூர்த்திசெய்ய R+ரிய சக்தியிலிருந்து மின்னுற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் R+ரிய சக்தியிலிருந்து மின்னுற்பத்தி வழிமுறைக்கான ஆரம்ப மூலதனம் அதிகமாதலால் எதிர்பார்த்தளவு இன்னும் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் 56 வீதம் மின்சாரம் பெற்றோலியம் மற்றும் நிலக்கரி போன்ற R+ழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலங்களிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தவிர இலங்கையின் போக்குவரத்து பெற்றோலியத்திலே முழுமையாக தங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஏற்றுமதி மூலம் பெறப்படும் வருமானத்தின் அரைவாசி (50%) பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான தொடர்ச்சியான சவால்கள் நிறைந்து காணப்படுவதனால் மின்வலு மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான ஊக்குவிப்பு திட்டங்கள் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக குறைந்த மின் பாவனையாளர்களுக்கு குறைந்த கட்டணமும் மின் பாவனை அதிகரிக்கும் போது அலகுக்கட்டணமும் அதிகரிக்கப்படுவதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். எனினும், நாட்டில் ஏற்படும் வரட்சியான காலநிலை, உலக சந்தையில் எண்ணெய் விலை தளம்பல், வருடாந்தம் அதிகரிக்கும் மின்சக்திக்கான தேவை, என்பன உள்நாட்டு மின்னுற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் 2000ம் ஆண்டோடு ஒப்பிடும் போது போக்குவரத்திற்கான பெற்றோலிய இறக்குமதி மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. இலங்கையின் வெகுசனப்போக்குவரத்தின் வினைத்திறனற்ற தன்மை தனியார் போக்குவரத்துக்குரிய தேவையை அதிகரித்ததனால் அதற்கான எரிசக்தி தேவையும் அதிகரித்துள்ளது. வினைத்திறனான பொது போக்குவரத்து வழிமுறைகள், குறிப்பாக ரயில் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.
மின் சக்தியை பெறக்கூடிய ஏனைய வளங்கள் இலங்கையில் காணப்பட்டாலும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான ஆய்வுகளும், நிதி ஒதுக்கப்படுவதும் சரியாக ஆரம்பிக்கப்படவில்லை. உதாரணமாக கடல் நீர், நிலக்கீழ் வெப்பம், இயற்கை வாயு, மற்றும் கழிவிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான கலந்துரையாடல்கள் கொள்கையளவில் காணப்பட்டாலும் அவற்றிற்கான பரீட்சார்த்த கணிப்பீட்டு வழிமுறைகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. பெற்றோலிய எண்ணெய்வளம் மற்றும் ஏனைய சக்தி மூலங்களை நோக்கி வல்லரசு மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நாடுகளையும் தாண்டி ஏனைய நாடுகளிலிருந்து இலவசமாக சுரண்டிக்கொள்ள யுத்தங்களை முடக்கிவிட்டுள்ள இந்த காலத்தில், எம்மை சூழவுள்ள வளங்களை சரியாக இணங்கண்டு கொள்வதற்கான ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பங்களுக்கு வெளிநாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எமது பல்கலைக்கழகங்களும், பாடசாலைகளும், இளைஞர்களை இத்துறையில் புத்தாக்க சிந்தனைக்கான ஆய்வுகள் மற்றும் கருவிகளை உருவாக்குவதில; கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். சக்தி வளங்களை மிக வினைத்திறனாக பாவிக்கக்கூடிய உற்பத்திப்பொருட்களுக்கு உலகலாவிய ரீதியில் கிராக்கி அதிகரித்து வருகின்ற அதேவேளை, அவை சூழலிற்கு பாதிப்பில்லாமல் இருக்கும் போது அவற்றின் கிராக்கி இரட்டிப்படைகின்றன. பிராந்திய மற்றும் தேசிய ரீதியான புத்தாக்க சிந்தனைகள் விஸ்தரிக்கப்பட்டு உள்நாட்டிலே நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கக்கூடிய தொழில்துறைகளை ஊக்கிவிக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் நீருக்கும் எரிபொருள் வளங்களுக்கும் தேசிய பிராந்திய எல்லைகளை தாண்டி உலகலாவிய ரீதியான போட்டித்தன்மை ஏற்படும். எமது பாடசாலைகள், மதஸ்தலங்கள், அலுவலகங்கள,; கிராமங்கள் தோறும் சக்தியை வீண்விரயமாக்கக்கூடிய விடயங்களை கண்டறிந்து, சக்தி வினைத்திறனுடைய புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த முடியும்.