சிலோன் மீடியா போரத்தின் ‘பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’ சுதந்திர தின விழாவும் மரநடுகையும்!
‘பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் 72வது தேசிய சுதந்திர தின விழாவும் மரநடுகையும் சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பொது நூலக வீதி தாரைக்கேணி தோனா முன்றலில் இன்று (04) செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, உலக சமாதான தூதுவர், மரைக்காயர், தொழிலதிபர் அல்-ஹாஜ் ஏ.ஹிபத்துல் கரீம், சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவரும், முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜஃபர், கணக்காளர் ஏ.எல்.எம். நஜிமுதீன், சிலோன் மீடியாh போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் எம்.யூ. நூருல் ஹூதா, உப தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர்களான எம்.எம.றின்சான், எம்.எம்.இம்தியாஸ், ஏ.எல்.நயீம், உறுப்பினர் எம்.என்.அப்ராஸ், ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.எம்.காலிதீன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், கழக வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸினால் தேசியக் கொடியேற்றப்பட்டதுடன் தேசியம் கீதம் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிதிகளினால் தாரைக்கேணி தோனாவினை சுற்றிவர நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.