சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் தலைவர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றிய செயலமர்வு
(ஷைய்பான் அப்துல்லாஹ்) @ceynews.lk
சமுர்த்தி செளபாக்கியா வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கு வாசிப்பின் அவசியம், சமூக ஊடகங்களின் ஆதிக்கம், பாவனை மற்றும் போலிச் செய்திகளை அடையாளம் காணுதல் தொடர்பிலான செயலமர்வு இன்று (20) சமுர்த்தி மகா சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் வளவாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எந்திரி ஏ.எம்.அஸ்லம் சஜா கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம், சமூக ஊடகங்களின் ஆதிக்கம், பாவனை மற்றும் போலிச் செய்திகளை அடையாளம் காணுதல் தொடர்பில் மிகச் சிறந்ததொரு விரிவுரையினை நிகழ்த்தினார். இதில் சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல்.ஏ. ஜுனைதா, எஸ்.றிபாயா, ஏ.எம்.ஏ.கபூர், சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் ஏ. எம்.எம்.றியாத் உள்ளிட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கு “மெட்ரோ லீடர்” பத்திரிகை அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.