கல்முனை மாநகரசபை 1
1988 இலிருந்து 2015 நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் சராசரியாக 23000 வாக்குகளை அனைத்து தேர்தல்களிலும் பெற்றிருக்கிறது. 2006 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலிலும் 2012 மாகாண சபைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டே இவ்வாக்குகளைப்பெற்றது. UNP உடன் இணைந்து போட்டியிட்ட சந்தர்ப்பங்களில் 2000 தொடக்கம் 4000 வாக்குகள் மாத்திரமே அதிகமாக பெற்றிருக்கிறது (2008 மாகாண சபைத்தேர்தல் மற்றும் 2015 பாராளமன்ற தேர்தல்). 30 வருட வரலாற்றில் கல்முனை மாநகரத்தை ஆட்சி செய்த முஸ்லிம் காங்கிரஸிற்கு 2018 மாநகர சபைத் தேர்தல் எவ்வாறு அமையப்போகிறது?
– வட்டார முறைத்தேர்தலில் முஸ்லிம்களுக்கான 17 வட்டாரங்களிலும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துகொள்ளுமா?
– சாய்ந்தமருது தனியாக சுயேட்சைக்குழுவில் கேட்கும் போது ஏனைய 11 வட்டாரங்களிலுமாவது அது வெற்றிகொள்ளுமா?
– 30 வருடமாக கல்முனை மாநகரத்தின் அபிவிருத்தியிலே எந்த சிறியளவாவது முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்களா?
– தேசிய ரீதியில் முஸ்லிம் உரிமை அரசியலில் முஸ்லிம் கட்சிகள் விட்ட பல தவறுகள்; தொடர்ந்தும் ஊழல் நிறைந்தஇ பணத்தை மையமாக கொண்டு அரசியல் செய்து பழகிய மூன்று முஸ்லிம் கட்சிகளுக்கும் மக்கள் தொடர்ந்தும் வாக்களிக்க தயாரா?
– மாற்று முஸ்லிம் அரசியல் கொள்கைகளை முன்வைத்து அரசியலில் வந்திருக்கின்ற நல்லாட்சிக்கான முண்ணனி போன்ற கட்சிகளின் வருகையால் இந்த மாற்றம் ஏற்படுமா?
எல்லா வழிகளிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அந்த மாற்றத்தினை முன்னோக்கி நகர்த்தும் மிக முக்கியமான தேர்தலாகவே இம்முறை கல்முனை மாநகர சபைத்தேர்தல் பார்க்கப்படும்.
கல்முனை மாநகரசபையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள்.
1. ஓரு ஊர் ஒரு விடயத்திற்காக ஒற்றுமைப்பட்டு அவ்வூரிலுள்ள அனைத்து சிவில் சமுக அமைப்புக்களும் ஊரின் தலைமைத்துவ சபை ஒன்றின் கீழ் ஒன்றுபட்டு தனது ஊர் சார்பாக ஒரு சுயேட்சை குழுவை முன்னிறுத்துகின்ற போது அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவது. சாய்ந்தமருது மக்களுக்கு முன்னாலுள்ள தீர்வு இந்த தெரிவை தவிர வேறு வழிகள் தற்போதைய சு10ழலில் மிகக்குறைந்த பலனையே கொண்டு வரும். ஆறு வட்டாரங்ளிலிருந்தும் இச்சுயேட்சை குழு உறுப்பினர்களை அதிக வாக்குகளின் மூலம் தெரிவுசெய்வதன் மூலமே தனது ஊர் சார்பான அபிவிருத்தி மற்றும் உரிமை சார் கோரிக்கைகளை உள்ளுராட்சி சபையில் உறுதிப்படுத்த முடியும்.
2. ஓரு ஊர்ரீதியாக ஒற்றுமைப்பட்டு அரசியலில் வேட்பாளர்களை நிறுத்த முடியாத விடத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தும் போது மக்கள் ஒன்று கட்சி ரீதியாக தனது வட்டார வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கட்சி ரீதியான வேட்பாளர் ஒரு சிறந்த வேட்பாளராக இருக்குமிடத்து அவரை தெரிவுசெய்வதில் மக்கள் முன்வரவேண்டும்.
3. ஆனால் அக்கட்சி சார்பாக இடப்படும் வேட்பாளர் ஒரு பொருத்தமில்லாத வேட்பாளராக இருக்குமிடத்தில் கட்சியின் மீதான நம்பிக்கையை விடுத்து அவ்வட்டார வேட்பாளர்களுள் யார் சிறந்த வேட்பாளர் என்ற என முடிவுசெய்து அவரை தெரிவு செய்வதற்கு மக்கள் முன்வரவேண்டும்.
4. இவை மூன்று தெரிவுகளையும் தாண்டி உறவு முறை ரீதியாக உறவுக்கார வேட்பாளருக்கும் கட்சிகளின் மூலம் இலாபமடைந்தவர்கள் அக்கட்சிக்கு விசுவாசமாக அக்கட்சி வேட்பாளருக்கும் வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுளை மறுப்பதற்கில்லை.
சாய்ந்தமருது தவிர்ந்த ஏனைய 11 முஸ்லிம் வட்டாரங்களிலும் மக்கள் மேலுள்ள எந்த தெரிவை முன்னிருத்தவிருக்கிறார்கள் என்பதைப்பொருத்தே கல்முனை மாநகரசபையில் ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது என்பது தங்கியுள்ளது. அதேவேளை இந்த 11 ஆசனங்கள் எவ்வாறு போனாலும் சாய்ந்தமருதினதும் கல்முனை தமிழ் மக்களினதும் சேர்ந்த 13 உறுப்பினர்கள10ம் விகிதாசார ரீதியாக கிடைக்கக்கூடிய 6 அல்லது 7 ஆசனங்களுமாக 19 பேர் அல்லது 20 பேர் என்பது மொத்த சபையில் 50மூ ஆகையால் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் கல்முனை மாநகர ஆட்சி இதுவரை காலமும் இருந்த ஆட்சியை விட மிக வித்தியாசமாக அமையப்போவதை ஒரு மிகப்பெரிய மாற்றமாகவே கருதவேண்டும்.
கடந்த 10 வருடங்களாக கல்முனை மாநகரசபையை ஆட்சிசெய்த முஸ்லிம் காங்கிரஸை விட்டும் மக்கள் மாற்று கட்சிகளுக்கும் மாற்று அரசியல் வழிமுறைகளுக்கும் செல்லவேண்டிய கட்டாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கல்முனை மாநகர சபை அந்தஸ்த்தை பெற்று நடைபெற்ற இரண்டு மாநகர சபை தேர்தல்களிலும் 22000 வாக்குகளை (50%) பெற்று மக்கள் ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் ஊழல் பிரதேசவாத வங்கிரோத்து அரசியலைவிட்டும் நீங்கி ஊழலற்ற சமூக நீதியை நிலைநிறுத்தி அரசியல் செய்யக்கூடிய அரசியல் கட்சிகளையும் பிரதிநிதிகளையும் ஆதரித்து கல்முனை மாநகர சபையில் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மக்கள் முன்வரவேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இந்த வெற்றிடத்தை நிரப்பப் போவதில்லை என்பதே அவர்களுடைய செயற்பாடுகளும் நிருபித்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு மாற்றீடாக UNP SLFP போன்ற கட்சிகளில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்க போகின்றார்களா அல்லது மாற்று அரசியலை முன்னெடுத்திருக்கின்ற NFGG போன்ற கட்சியை ஆதாவளிக்கப்போகின்றார்களா ?
இவ்வரசியல் மாற்றத்தில் சாய்ந்தமருது தனது உள்ளுராட்சி சபை கிடைக்காத நிலையில் இத்தேர்தலை சந்திக்க நிர்;ப்பந்திக்கப்பட்டுள்ள இந்நிலையில் ஊர்; தலைமைத்துவ சபையை முன்னிறுத்திய சுயேற்சை குழு என்ற அரசியல் நகர்விலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது. 30 வருட முஸ்லிம் தனித்துவ அரசியல் வரலாற்றில் ஏற்பட்டிருக்கின்ற இந்த மாற்றம் மக்களாலும் அதை முன்னின்று நடாத்துகின்ற பள்ளிவாசல் மற்றும் சிவில் சமுக தலைமைகளாலும் தொடர்ந்தும் கொண்டு செல்லப்படுவதற்கு மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். இவ்வாறான முக்கிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் அச்செயற்பாடுகளில் முன்னின்று செயற்படுபவர்களுக்கு பிரதேச வாத சாயம் பூசுவதை விட்டு விட்டு மிக முக்கிய அரசியல் மாற்றத்திற்கு முன்னின்று உழைப்பதற்கு அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க அனைத்து மக்களும் ஒன்றினையவேண்டும். ஏனைய ஊர்களும் தமது ஊர் தலைமைகளின் கீழ் சுயேற்சையாகவோ அல்லது 30 வருடமாக ஊழல்இ ஏமாற்று அரசியலையும் பிரதேசவாத சிந்தனைகளையும் விதைத்து தனிநபர் அரசியல் இலாபங்களுக்காக சமூக நலன்களை விற்றுக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளை வீசிவிட்டு மாற்று அரசியல் கட்சிகளையோ அல்லது சிறந்த திறமையான சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய நபர்களை ஆதரிக்க முன்வரவேண்டும்.
இம்மாற்றத்தின் மூலமே எமது நகரங்களை அது கல்முனையாக இருக்கலாம் சாய்ந்தமருதாக இருக்கலாம் மருதமுனையாக இருக்கலாம் – இலங்கையிலேயே சிறந்த நகரங்களாக கட்டியெழுப்ப முடியும். தமிழ் முஸ்லிம் சமுகங்கள் ஒற்றுமையாகவும் நிம்;மதியாகவும் வாழ முடியும். ஓவ்வொரு ஊருக்குமான உரிமைகளை பெற்று அவ்வூர்கள் தமது அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல முடியும்.