வருடாந்த செயற்திட்டம் (#Action_Plan) தயாரிப்பதற்கான ஒன்றுகூடல் Date : 19. 01. 2020 (ஞாயிற்றுக்கிழமை)

கடந்த 19-01-2020, ஞாயற்றுக்கிழமை நடைபெற்ற இயற்கையை நேசிக்கும் மன்றத்தின்(NLF) 2020 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு திட்ட அறிக்கை தயாரிக்கும் கலந்துரையாடல் பொறியியலாளர் எ.ஏம் அஸ்லம் ஸஜா, விரிவுரையாளர், பொறியியல் பீடம் தென் கிழக்கு பல்கலைக்கழகம், தலைமையில் இனிதே நடைபெற்றது.

இக் குழும கலந்துரையாடலில்
இயற்கை சுற்றுச்சூழலான நீர், நிலம், வளிமண்டலம் ஆகியவற்றை பாதிக்கும் காரணிகள் அடையாளப் படுத்தப் பட்டன. இக்கலந்துரையாடலில் நீர், நில மாசுபடுத்தும் காரணிகளுக்கு முன்னுரிமையளித்து ஆலோசிக்கப்பட்டன.

மன்றத்தின் செயற்பாட்டாளர்களினால் அடையாளப் படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கான காரணிகளும் கலந்துரையாடப்பட்டு, அதற்கான சாத்தியமான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.
அதனடிப்படையில் இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் 20ஆம் ஆண்டிற்கான முறையான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளை பொது இடங்களிலும், பாடசாலைகளிலும் ஒழுங்கு செய்தலும்,
சிரமதான பணிகளை முன்னேடுத்தல், மீள்சுழற்ச்சிக்கான இலகுவான வழிமுறைகளை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தல் எதிர்கால திட்டங்களில் முக்கியமான அம்சங்களாகும்.

நமது சுற்றுச்சூழலை தூய்மையானதாகவும், பசுமை பொருந்தியதாகவும் மாற்றுவதற்கு இயற்கையை நேசிக்கும் மன்றம் சகலரினதும் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வேண்டி நிற்கிறது.

#Clean_and_Green_Maruthoor
#NLF