நம்பிக்கை இல்லத் திட்டத்தின் பங்குதாரர்களினுடனான ஒரு நாள் கருத்தமர்வு

நம்பிக்கை இல்லத் திட்டத்தின் பங்குதாரர்களினுடனான ஒரு நாள் கருத்தமர்வு நிகழ்வு கடந்த 21.04.2017 அன்று TILKO Jaffna City Hotel இல் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பிரதான விடையமாக பெண்கள் சிறுவர்கள் விவகார அமைச்சு பங்காளித்துவ அடிப்படையில் எமது நிறுவனத்துடன் இணைந்து நம்பிக்கை இல்லச் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பானது அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அசோக அலவத்த அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் Stéphanie Périllard, The Deputy Head of Mission, the Embassy of Switzerland, ஜெசாக் நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.நடராஜா சுகிர்தராஜ் ஆகியோர் நிகழ்விற்கு தலைமை வகித்திருந்தனர். மேலும் இந் நிகழ்வில் யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பிரேதேச செயலகங்களில் பணிபுரியும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு சபை பணியாளர்கள், மாகாண சபையின் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் நிதி நிறுவனப் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், ஆகியோர் உள்ளடங்கலாக 120 பேர் கலந்து கொண்டிருந்தனர்.