இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் 72 வது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியும், மரநடுகையும்.


———————————————-

சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் 72 வது சுதந்திர தினம் சிறப்பு நிகழ்ச்சியானது பிரதம அதிதிகளான, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரகீப், சாய்ந்தமருது பிரதேச செயலக செயலாளர் ஐ.முகம்மட் றிகாஸ், சாய்ந்தமருது சுயேச்சை குழு தலைவரும், பெமிலி சொய்ஸ் நிறுவன உரிமையாளருமான எச்.எம். நெளபர் மற்றும் கல்முனை மின்சார சபை பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான், கல்முனை பிராந்திய கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், சாய்ந்தமருது வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம் மிஹ்லார், உலக சமாதான தூதுவர் ஏ.இபத்துள் ஹரீம் அவர்களுடன் பாடசாலை அதிபர்களின்
பங்குபற்றுதலுடன் இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது தேசிய கொடி ஏற்றுதலின் பின் இரண்டு நிமிடம் நாட்டிற்காக உயிரிழந்த படைவீரர்களுக்க மெளன அஞ்சலியின் பின் சுத்தமானதும் பசுமையான மருதூர் என்ற இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் நோக்கத்திற்கு அமைய, சுத்தம் செய்யப்பட்டு ஒளிருட்டப்ட்ட முகத்துவார கடற்கரை பிரதேசத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. அதன்பிற்பாடு,

இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளரான டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களின் வரவேற்பு உறையை தொடர்ந்து கல்முனை மாநகர முதல்வரால் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் நமது கடமைகள் குறித்தும் பேசியதுடன் இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் சுழல் சம்மந்தமான கரிசனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் நன்றியை தெரிவித்து, அவரின் தொடர்ச்சியான ஆதரவையும், உதவிகளையும் தருவதாகவும் கூறியதுடன், நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு “மருதூர் சதுக்கம்” எனவும் அடையாமிட்டார், மருதூர் சதுக்கதை மேலும் விருத்தி செய்வதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்வதாகவும் கூறினார். அத்துடன் இயற்கையை நேசிக்கும் மன்றம் இஇந்த செயற்பாடை முன்கொண்டு செல்லவேண்டுமென்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து, இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளரான பொறியியலாளர் எம். அஸ்லம் சஜா அவர்களால் நன்றியுரை நிகழ்த்திய பிற்பாடு தனவந்தர்களின் பங்களிப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளை அன்பளிப்பு செய்தபின்பு, நிகழ்வு ஸலாவத்துடன் இனிதே நிறைவடைந்தது.

இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் சிரமதான பணிக்கு தங்களது இயந்திரத்தை தந்து எல்லைகள் கடந்து தனது சேவையை செய்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.தாஹிர் அவர்களுக்கு இயற்கையை நேசிக்கும் மன்றம் மனங்கள் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதுடன்,

இந்நிகழ்விற்கு பக்கபலமாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த அனைத்து இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்களுக்கும், தானாக முன்வந்து அன்பளிப்பு செய்த நல்லுள்ளங்களான டாக்டர் சனூஸ் காரியப்பர், FSK உரிமையாளர் எம்.ஜ.எம் காலீத், தொழிலதிபர் ஏ.இபத்துள் ஹரீம், சகோதர் முர்சித் அமின், பெமிலி சொய்ஸ் உரிமையாளர் எச்.எம். நெளபர், பொறியியலாளர் நிசாத் கமால், டாக்டர் தில்சான், பியூட்டி பளஸ் உரிமையாளர் சகோதர் மன்சூர் ஆகியோருக்கும், தானாகவே முன்வந்து இதர செலவுகளை செய்த செயற்பட்டாளர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதுடன்,
மற்றும் ஒன்றாக இணைந்து செயற்பட்ட பொதுமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,
இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இயற்கையைநேசிக்கும் மன்றத்தோடு கைகோர்க்குமாறு வேண்டுகோளையும் விடுக்கின்றது.

🌴நமது சுற்றுச்சூழலை நாமே காத்திடுவோம்🌴
🌴மருதூரின் பசுமை புரட்சிக்கு வித்தாகுவோம்🌴
🌴ஒன்றிணைவோம்🌴
🌴ஒன்றிணைந்து தூய்மையான, பசுமையான நகரை கட்டியெழுப்புவோம்🌴

🍃🍃🍃ஏற்பாடு🍃🍃🍃

Natural Loving Forum -Sainthamaruthu (NLF)