அமைப்பின் தூர நோக்கு (Vision) :
நிலையான சமூக தீர்வுத்திட்டத்தினை வழங்குவதினூடாக இலங்கை வாழ் மக்களை நெறிப்படுத்தல்
குறிக்கோள் (Mission) :
சிறந்த வழிமுறைகளினூடாக சமூகத்தின் தேவைகளை இனங்கண்டு அதன் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்தல்.
அமைப்பின் செயற்பாடுகள் (Activities) :
- ‘இன்றய இளைஞ்சர்கள் நாளைய தலைவர்கள்’; என்ற தொனிப்பொருளில் இளைஞ்சர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறைகளை திட்டமிட்டு நடத்துதல்.
- கல்வி அபிவிருத்தியினூடாக சமூக மேம்பாட்டுக்கு உதவுதல்
- கலாச்சார, சமுக மற்றும் ஏனைய செயற்பாடுகளின் மூலம் அங்கத்தவர்களுக்கிடையில் சகவாழ்வினை ஏற்படுத்தல்
- ஒழுக்கமான மற்றும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட சமூக பிரஜைகளை உருவாக்குதல்
- பல்லின சமுகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக் கூடிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
- சமூக அபிவிருத்தியில் பெண்களும் முக்கிய பங்காளிகளாவர் என்ற தொனிப்பொருளில் பெண்களுக்கான பல்வேறு வேலைத்திட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்தலும் அவர்களது ஆளுமையினை விருத்தி செய்தலும்.
- பிரதேசத்தில் காணப்படும் மூலவளங்களை இனங்கண்டு அவற்றைக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சமுக, சமுதாயச் செயற்பாடுகளில் பங்காளர்களாக விளங்குதல்
- பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒரு இணைப்பாளர் குழுவாக இனங்காணப்படும் நிலையில் தொழிற்படல்.
- பிரதேச சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சி செயற்திட்டங்களை ஏற்படுத்தலும் அதனை நடைமுறைப்படுத்தலும்.
- அநாதைகள், விதவைகள், வறுமையானவர்கள், அங்கவீனர்கள், விசேட தேவையுடையோர் போன்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுதல்.
- அநாதைகள், வறுமையான மாணவர்கள், விசேட தேவையுடையோரை இனங்கண்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் புலமைப்பரிசில் திட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்தல்.
உயர்மட்டக்குழு :
இச்சபை உறுப்பினர் தொகை 05 ஆகும் இச்சபை உறுப்பினர்களாக தலைவர், உப-தலைவர், செயலாளர், உப-செயலாளர், பொருளாளர் ஆகியோரை உள்ளடக்கும்.
செயற்குழு :
இச்சபை உறுப்பினர் தொகை 10 ஆகும் இச்சபை உறுப்பினர் தெரிவு வருட இறுதிப் பொதுக்கூட்டம் ஒன்றில் இடம்பெறல் வேண்டும்.