சிறந்த சமூக நிறுவனங்களை உருவாக்குதல் – சில வழிகாட்டல் குறிப்புக்கள்

Towards a better Civil Society Organisations – Good practice guidelines

இன்றைய காலத்தில் அதிகமாக தனிநபர் உருவாக்கம்இ தனிநபர் ஆளுமை விருத்தி போன்ற தனிநபர் அபிவிருத்தி தொடர்பாக மனித வள அபிவிருத்தியாளர்களால் அதிகமாக கவனம் செலுத்தப்படும் விடயமாக காணப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக அல்லது இதனுடன் தொடர்புபடுத்தப்பட்ட வேறு ஓரு அங்கமாக நிறுவனங்களை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் ஒரு தேவையாக உணர்ப்படுகிறது.

திட்டமிடல் என்ற முகாமைத்துவ கோட்பாட்டின் அடிப்படை அம்சமாக கூட இவ்விடயம் கருதப்படுவதனால் அதனை சிறந்த வழிகாட்டலின் அடிப்படையில் நோக்குவதும் மிக அவசியாமாகின்றது.

ஒரு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அணுகுமுறை நவீன காலத்தில் வெற்றியளித்;து வருவதனை அனுபவரீதியாக உணர்கின்ற போக்கு இஸ்லாமிய பணியாளர்களிடம் வலுப்பெற்று வருவதனை நாம் அவதானிக்க முடிகிறது.

எனவே சமூகத்தில் ஏலவே காணப்படும் பல்வேறுபட்ட சமூக நிறுவனங்களை ((Civil Society Organisastions) ஒரு இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் (Towards a vision) தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கும் சில வழிகாட்டல் குறிப்புக்களை முன்வைதற்கு இத்தொடரின் மூலம் நான் முயற்சிக்கிறேன்.

இந்த வகையில், ஒரு சிறந்த நிறுவனமொன்றை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டல் குறிப்புக்களை வழங்குவதற்கான ஓரு களமாக இத்தொடரை எழுதுகிறேன்.

இத்தொடரின் முதல் பகுதியாக்

1. சமூக மட்ட நிறுவனங்கள் (Community Based Organisations/ Civil Society Organisation) – சில அடிப்படைகள்
ஒரு நிறுவனத்தின் கடைப்பிடிக்கும் அல்லது நடைமுறைப்படுத்தும் அடிப்படைக் கொள்கைகள்இ அந்நிறுவனம் அதன் இலக்கை (Mission) வரையரை செய்வதில் தங்கியிருக்கிறது. எனவே ஒரு நிறுவனத்தின் இலக்கை சரியாக வரையறுப்பது மிக முக்கியமான முதற்படியாக அமைகின்றது. இதன் மூலம் ஒரு நிறுவனம்; எந்த இலக்கை அடைய உருவாக்கப்பட்டிருக்கிறதுஇ அவ் இலக்கை எவ்வாறு அடையும் என்பன பற்றி இப்பகுதி தெளிவுபடுத்தும்.

2. நிறுவன ஆளுகைக் கட்டமைப்பு முறை – Governance Structure.

ஒரு நிறுவனம் அதன் பங்காளிகளுக்கும் பயனாளிகளுக்கும் வகைகூறூம் தன்மையுடையதாக (Accountable), அந்நிறுவனம் சிறந்த பலமான ஆளுகைக்கட்டமைப்பினை கொண்டிருக்க வேண்டும். இவ் உட்கட்டமைப்பே அந்நிறுவனத்தின் பங்களிப்பாளர்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவதற்கும் அதன் வளங்கள் உச்ச பயனைப்பெறுவதற்கான சிறந்த வழிமுறைகளில் பயன்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தவும் உதவும். எனவே நிறுவன ஆளுகைக்கட்டமைப்பை எவ்வாறு சிறந்த முறையில் அமைக்க முடியும் என்பதை இப்பகுதியில் நோக்குவோம்.

3. மூலோபாய திட்டமிடல் – Strategic Planning
ஒரு நிறுவனம் அதன் இலக்கை அடைய திட்டமிடும் நிகழ்ச்சித்திட்டங்களின் தாக்கம் (impact) சரியான முறையில் ஏற்பட அதன் நிகழ்ச்சித்திட்டங்களின் தெளிவான குறிக்கோளை வரையறுப்பதிலும் செயற்படுத்துவதிலுமே தங்கியிருக்கிறது. இப்பகுதியில் அதற்கான மூலோபாய திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என நோக்குவோம்.

4. நிறுவனத்தின் நிதி முகாமைத்துவம் – Managing Finance
ஒரு நிறுவனம் அதன் பங்களிப்பாளர்களின் (அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குகொள்ளும் ஏனைய நிறுவனங்கள், பொது மக்கள், பயனாளிகள், ஊளியர்கள் மற்றும் ஏனைய தனிநபர்கள் உட்பட) நம்பிக்கையை (Trust) பல்வேறு வழிகளில் வெற்றி கொள்ள அல்லது இழக்க வாய்ப்புண்டு. இந்நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் மிக முக்கியமான ஒரு விடயமாக காணப்படுவது பொறுப்புவாய்ந்த (Responsible), வெளிப்படையான (Transparent) நிதி முகாமைத்துவ ஒழுங்குமுறையை உருவாக்கி அந்நிறுவனம் பெற்றுக்கொள்ளும் நிதியை சிறப்பாக பயன்படுத்தலாகும். இது தொடர்பான சில வழிமுறைகளை இப்பகுதியில் நோக்குவோம்.

5. மனித வளங்களை முகாமைத்துவம் செய்தல் (Managing People / Human Resources)

6. கருத்திட்டங்களை முகாமைத்துவம் செய்தல் (Managing Projects/Programmes)

7. நிறுவனத்தின் அலுவலக முகாமைத்துவம் (Office Administration)

8. தரம்; மற்றும் தொடர்பாடல் முகாமைத்துவம் (Quality/ Communication Management)

9. நிதி சேகரித்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் (Fundraising and publicity)

எனும் 9 பகுதிகளாக நோக்குவோம்.
இவற்றை ஒரு நிறுவனத்தின் பயனாளிகள் (Beneficiaries)/ பங்குபற்றும் எல்லா மட்ட உறுப்பினர்களையும் (Stakeholders) மையப்படுத்திப்பார்த்தால் கீழுள்ள கட்டமைப்பில் உருவப்படுத்தலாம்.

அடுத்த தொடரில் மேலுள்ள ஒவ்வொரு கட்டமைப்பையும் விளக்கமாக நோக்குவோம்.