சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது – 05

இலங்கையின் மொத்த தொழிலாளர்களில் 38% ஆனோர் பெண்களாவர். எனினும் 8% வீதத்திற்கும் குறைவான பெண்களே உயர் பதவிகளை வகிக்கின்றனர். தொழில்துறைகளில் ஈடுபடுவோரிலும் அதிகமானோர் கூலித்தொழில் மற்றும் ஊதியமற்ற குடும்ப ரீதியான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாவர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக பல்லாயிரக்கணக்கான இலங்கைப்பெண்கள் பணிபுரிவதும் ஒரு பாரிய சவாலாகவே கருதவேண்டும்.  குடும்ப வறுமை மற்றும் சுமை காரணமாக தவிர்க்கமுடியாமல் பணிப்பெண் தொழிலைப்பெற்றுக்கொள்ளும் இவர்கள் பல பாலியல் உடலியல் வன்முறைக்குள்ளாகிவருகின்றனர். ஒரே தொழிலை செய்யும் ஆண்களுக்கு பெண்களை...

தரமான கல்விநிலையே சமூக முன்னேற்றத்திற்கான ஆணிவேர் – 04

ஒரு மனிதன் தனது வாழ்நாள் பூராகவும் கற்கக்கூடியவனாக இருக்கிறான் (Lifelong learner). அது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி முறையினூடகவோ (formal education) அல்லது தனது சொந்த வாழ்நாளில் பெறும் படிப்பினைகளாகவும் (informal education) இருக்க முடியும். நாட்டின் எல்லா பிரஜைகளும் குறிப்பாக இளைஞர் யுவதிகள் அனைவரும் கல்வியறிவு (literacy) மற்றும் எண்ணறிவு (Numeracy) பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்ற மிக அடிப்படை இலக்கை அடைவது கல்வியின் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும். பொதுவாக ஒவ்வொரு மனிதனினதும் வயது வீச்சிற்கேற்ப சிறுவயதிலிருந்து...

YES HUB project for Alumni Engagement Innovation Fund 2019 got to Semi-Finalist

Youth Entrepreneurship Sustainability (YES) HUB, Alumni Engagement Innovation Fund project from Sri Lanka is among the 2019 semifinalists, chosen out of more than 1,300 applications this year! https://alumni.state.gov/aeif/aeif-2019-semifinalists In 2019, the U.S. Department of State hosted its ninth annual Alumni Engagement Innovation Fund (AEIF) project competition. AEIF supports alumni initiatives that promote shared values...

சுகதேகியாக வாழ்தல் – நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 03 (விடிவெள்ளி)

வறுமையற்ற பட்டினியற்ற குடும்பங்கள் கிராமங்கள் நாடுகள் என இரண்டு மிக அடிப்படையான நிலைபேறான சமூக இலக்குகள் தொடர்பாக கடந்த வாரங்களில் எழுதினேன். இந்த வாரம் ஆரோக்கியமான நோய்களற்ற வாழ்வு தொடர்பான சமூக இலக்கினைப்பற்றி வெளிவருகிறது. ஒரு பிரதேசத்தின் அல்லது சமூகத்தின் எல்லா வயதுப்பிரிவுகளிலுமுள்ளவர்கள் சிறந்த உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதை உறுதிசெய்வது அவசியமாகும். அது குழந்தைகள் சிறுவர்கள் வாலிபர்கள் நடுத்தர வயதினர் மற்றும் வயோதிபர்கள் என எல்லா மட்டங்களிலும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் காணப்படுகின்றன....

சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் ஊடக மாநாடு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கடந்த 2019.05.19ம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் செயலாளர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் போஷகர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், உப தலைவர்களான சங்கரத்ன தேரர், மௌலவி இசட்.எம்.நதீர், போதகர் ஏ.கிருபைராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமய, சமூகங்கள் சார்பில் கருத்துரையாற்றினர்....