வியூகத்தின் 3வது ஆண்டு நினைவு மலர் வெளியீடும் சஜாவின் ஆசிச்செய்தியும்

நவீன தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்களின் வகிபாகம் தனிமனிதனிதும் சமூகங்களினதும் வாழ்வில் தவிர்க்கமுடியாத தொடர்பாடல் சாதனமாக மாறியுள்ளது. இந்த யுகத்தில் வியூகம் குழுமத்தின் வரவு கிழக்கிலைங்கையில் மட்டுமல்ல முழு தேசத்தினதும் சமூக ஊடக வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஓரு செயற்பாடாகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான தொடர்பாடல் தளமாக 2004ல் உருவான பேஸ்புக் பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தொடர்பாடல் தளமாக விரிவடைந்து 2011 அளவில் 350 மில்லியன் பாவனையாளர்கள் கைத்தொலைபேசியினூடக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுள்...