வியூகத்தின் 3வது ஆண்டு நினைவு மலர் வெளியீடும் சஜாவின் ஆசிச்செய்தியும்

நவீன தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்களின் வகிபாகம் தனிமனிதனிதும் சமூகங்களினதும் வாழ்வில் தவிர்க்கமுடியாத தொடர்பாடல் சாதனமாக மாறியுள்ளது. இந்த யுகத்தில் வியூகம் குழுமத்தின் வரவு கிழக்கிலைங்கையில் மட்டுமல்ல முழு தேசத்தினதும் சமூக ஊடக வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஓரு செயற்பாடாகும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான தொடர்பாடல் தளமாக 2004ல் உருவான பேஸ்புக் பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தொடர்பாடல் தளமாக விரிவடைந்து 2011 அளவில் 350 மில்லியன் பாவனையாளர்கள் கைத்தொலைபேசியினூடக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுள் பிரவேசித்;தனர். இதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட வீடீயோ நேரலை போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப கருவிகளை சாதகமாக பயன்படுத்தி வியூகம் தான் சார்ந்த சமூகத்தில் மிகக் காத்திரமாக கால்பதித்தது எனலாம். முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் உணர்வுகள் சவால்களை நேர்த்தியாக திறன்பட பிரதிபலிக்கின்ற ஒரு இலத்திரனியல் ஊடகத்தின் தேவை வலுவாக உணரப்பட்ட காலத்தில் வரையறுக்கப்பட்ட மிக சொற்ப வளங்களுடன் தனது திறமையை மட்டுமே மூலதனமாக்கி குரலற்ற மக்களுக்கான குரலாக தன்னை வியூகம் அடையாளப்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெறும் சாதனையை எய்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

தானறிந்த வகையில் பேஸ்புக் மூலமாக ஒரு இலத்திரனியல் ஊடகத்திற்கு ஈடான பங்களிப்பை தனது சமூகத்திற்கு மட்டுமல்ல கடல்கடந்து வாழும் மக்களுக்கும்இப்பிரதேசத்தில் முதன் முதலில் உருவாக்கிய பெருமை வியூகத்தின் ஸ்தாபகர் ஜன_ஸ் சம்சுதீனையே சாரும் என்பதில் சந்;தேகமில்லை. தனது சிந்தனைக்கு வியூகம் என நாமமிட்டு சமூகத்தின் அனைத்து மட்;டங்களையும் சமூக சமய கலை கலாச்சார அரசியல் விடயங்களில் சாதகமான மாற்றத்திற்கான வியூகத்தை மிகவும் புத்தாக்க செயற்பாடுகளுடன் தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக தளராது இயங்கிவரும் வியூகம் நிறுவனம் மேலும் பல சாதனைகள் படைக்க இறைவனை பிரார்திப்பதோடு எமது சமூகம் சார்பான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.