பாதுகாப்பான மற்றும் உறுதியான நகரங்களையும்¸ குடியிருப்புக்களையும் உருவாக்குவோம் – 11

பாதுகாப்பான, சிறந்த நகரங்கள் தொடர்பான அபிவிருத்தி இலக்கில் ஆறு  பிரதான அம்சங்கள் உள்ளடங்கும்.

 1. வீடு/குடியிருப்பு வசதிகள்:

2030களில்¸ நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, கண்ணியமாக வாழக்கூடிய வீடு, குடியிருப்பு வசதிகள் (housing and settelments) மற்றும் அடிப்படைச் சேவைகள் (Basic services) மேம்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக சேரிகளில் வாழும் மக்களுக்கு (slum dwellers) அவர்களின் வீடு மற்றும் குடியிருப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் .

 • நகர அபிவிருத்தி:
 • நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புத்திட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல்.
 • நகரங்களை அனைத்து மக்களுக்கும் குறிப்பாக பெண்கள், சிறுபிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பசுமையாகவும் மற்றும் போதுமான பொது இடங்கள் மற்றும் வசதிகள் (Green cities with public spaces and social infrastructure) கிடைக்கக்கூடியதாக அமைத்தல் வேண்டும்.
 • தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலான அபிவிருத்தித் திட்டங்கள் வலுப்படுத்தப்படுவதன் மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஆகியவற்றிற்கு இடையிலான சாதகமான பொருளாதார¸ சமூக, மற்றும் சுற்றுச்#ழல் இணைப்புக்களுக்கு உதவுதல் (linking rural and urban population).
 • கலை, கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாத்தல்:

எமது நாட்டின் பிரதேசத்தின் கலை, கலாச்சார விடயங்கள் மற்றும் இயற்கைப்

பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

 • அனர்த்தங்களினால் பாதுகாப்பு:
 • 2030களில்¸ மரணங்களின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணிசமானளவு குறைத்தல். இதில் குறிப்பாக நீரினால் ஏற்படும் அனர்த்தங்கள், அடங்கலாக அனர்த்தங்களால் ஏற்படும். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நேரடியான பொருளாதார இழப்புக்கள் குறைக்கப்பட வேண்டும். இதன்போது ஏழை மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய #ழ்நிலைகளிலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
 • பேரழிவுகளிலிருந்து நகரங்களை பாதுகாத்து¸ அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் அமுல்படுத்தல்.
 • நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றினூடாக உள்நாட்டு பொருட்களைப் (locally available resources) பயன்படுத்தி நிலையான மற்றும் அனர்த்த பாதிப்புகளுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்ப உதவ வேண்டும்.

இலங்கை வருடந்தோறும் பல அனர்த்தங்களை எதிர்கொள்கின்றது. வெள்ளம், நிலச்சரிவு, வரட்சி, போன்ற அனர்த்த நிலமைகளினால் உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் வாழ்வாதார மிகப்பாரிய பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களில் ஏற்படும் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும்.

 • சுற்றுச்#ழல் பாதுகாப்பு

2030களில்¸ நகரங்களில் ஏற்படும் பாதகமான சுற்றுச்#ழல் பாதிப்பைக் குறைத்தல். இதன்போது வளி மாசடைசல் (air pollution) மற்றும் நகர கழிவு முகாமைத்துவம் (Muncipal waste managmeent) தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உலகின் மிக அடர்த்தியான நகரங்களான டெல்லி போன்றவற்றில் கடந்த காலங்களில் வழி மாசடைதல் தொடர்பான பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் இன்னும் இலங்கையில் வழி மாசடைதல் தொடர்பான விடயங்கள் முக்கியத்துவம் பெறவில்லை. சூழல் மாசடைதல் தொடர்பான பிரச்சினைகளில் திண்ம கழிவகற்றலே முன்னுரிமைப்பிரச்சினையாக அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக மாநகரங்கள் நகரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கையில் நாளாந்தம் உருவாகும் 12,000 டொன் குப்பைகளில் 33 வீதம் மேல் மாகாணத்தில் உருவாகுபவை. அதில் அரை வாசி மாத்திரமே சேகரிக்கபடுகின்றது. இவற்றை சரியாக முகாமைத்துவம் செய்வது மிகப்பாரிய சவாலாக மாறியுள்ளது. அருவக்காலில் அமைக்கப்பட்ட குப்பை கொட்டும் நிலப்பகுதியும் பாரிய சமூக எதிர்ப்பலைகளை உருவாக்கியிருக்கிறது.

 • போக்குவரத்து/வீதிப் பாதுகாப்பு:

2030களில்¸ பாதுகாப்பான போக்குவரத்து முறைமைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வீதிப் பாதுகாப்பு (road safety)¸ பொதுப் போக்குவரத்தினை விரிவாக்குவதும்¸இலகுவில் பாதிக்கப்படக்கூடிய  #ழ்நிலைகளிலுள்ள பெண்கள்¸ பிள்ளைகள்¸ ஊனமுற்றவர்கள் மற்றும் வயதான நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.

இலங்கையின் மொத்த வாகனப் போக்குவரத்தில் 47 வீதம் பஸ்களாகும். இதில் அரச பஸ்கள் 8 வீதம் மாத்திரமே. கெமி சரிய, நிசி சரிய, சிசு சரிய என பல்வேறு திட்டங்களை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியிருந்தது. இருப்பினும் பஸ் போன்ற பொது போக்குவரத்தின் தரம் சேவை வினைத்திறன் மிகக்குறைவாகும்.

இவ்விடயங்கள் ஒவ்வொன்றும் மிகவும் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும். எழுதப்பட வேண்டும். இப்பத்தியில் மிக சுருக்கமான அறிமுகத்தை தருகிறேன்.

2009ம் ஆண்டின் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் புதிய நகரங்களின் அபிவிருத்தி மிக முக்கிய கவனத்தை பெற்றது. கடந்த 10 வருடங்களில் நகர அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டு மிகப் பெரிய திட்டங்கள் பல ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அதிவேக பாதைகள், துறைமுக நகரம், விமான நிலையங்கள், துறைமுகங்கள், நவீன ரயில் போக்குவரத்து திட்டம் என நிரல் படுத்திக்கொண்டே செல்லலாம். இவை அனைத்தும் வெளிநாட்டு கடன்களின் மூலமே அமுல்படுத்தப்படுகின்றன என்பது நாம் அறிந்ததே.

அதேவேளை, 2030 ல் அண்ணளவாக 70 வீதத்திற்கும் அதிகமான இலங்கை மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள் என ஒரு கணிப்பு காட்டுகிறது. இது பல்வேறு சமூக, சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வீடமைப்பை பொறுத்தவரையில் 17 வீதமான மக்கள் தற்காலிக இருப்பிடங்களிலும் 1 வீதமானவர்கள் சேரிப்புறங்களிலும் வாழ்கின்றனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் (80,000) நிரந்தர வீடற்று காணப்படுகின்றனர் (2016). பெருகிவரும் சனத்தொகை நகர்ப்புறங்களில் வீட்டிற்கான தேவையை மேலும் அதிகரிக்கச்செய்யும் அதேவேளை மக்கள் தொடர்மாடி குடியிருப்பிக்கலாச்சாரத்திற்கு மாறும் காலம் வெகு தொலைவிலில்லை. இதற்கான திட்டமிடல்கள் இன்றே ஆரம்பிக்கப்படவேண்டும். பல்வேறு காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமலிருக்கின்றன. நில ரீதியான அரசியல் தீர்வுகளோடு எதிர்கால நிலப்பற்றாக்குறையினால் ஏற்படப்போகும் சமூக கலாச்சார ரீதியான பாதிப்புக்களுக்கு தீர்வு தேட வேண்டிய நிலை ஏற்படும்.