காலநிலை மாற்றங்களையும்¸ அதன் விளைவுகளையும் சிறந்த முறையில் எதிர்கொள்வோம் – 13

காலநிலை மாற்றத்தினை நாள்தோறும் நாம் உணர்ந்து வருகிறோம். இதில் மிக முக்கிய போக்குகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் அனுபவித்து வருகிறோம். குறிப்பாக:

– மழை பருவ காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சியினால் சடுதியான வெள்ள நிலை உருவாகிறது.

– மறுபுறத்தில் மழை பொழிய வேண்டிய காலங்களில் அதிக வரட்சி நிலவுகிறது.

– கடந்த காலங்களை விட அதிக உஸ்னம் நிலவுகிறது. இன்னும் பல பகுதிகளில் கடந்த வருடங்களில் குளிர் காலநிலை நிலவிய காலப்பகுதியில் அதிக வெப்பநிலையும் வெப்ப காலங்கள் குளிர்காலங்களாவும் மாற்றமடைந்து வருகிறது.

இவை ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது.

காலநிலை மாற்றம் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. எந்த சிந்தனைப்பிரிவாக இருந்தாலும் காலநிலை மாற்றத்தினை முழுமையாக தவிர்க்க முடியாது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். எனவே அவற்றை தணிப்பதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்குமே திட்டங்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

காலநிலை மாற்றம் தேசிய, சர்வதேச மட்டங்களில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசியலில் கூட பல வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை இதற்கென தனியான உலகளவிலான பல்தேசிய திட்டங்களையும் பொறிமுறைகளையும் செயற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடுகள் நடாத்தப்பட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்தப்படுகின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு உலகளாவிய திட்டங்கள் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையும் தனக்கான கொள்கையையும் திட்டங்களையும் முன்வைத்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கான செயலகம், மகாவலி மற்றும் சூழல் அமைச்சின் கீழ் இவ்விடயங்களை முன்னெடுத்து வருகின்றன.

21ம் நூற்றாண்டின் மனித சமூக இருப்பிற்கான, அபிவிருத்திக்கான மிகப்பெரிய சவாலாக காலநிலை மாற்றம் கருதப்படுகிறது. அதிக வெப்பநிலை, கடல் நீர் மட்டத்தின் உயர்வு அனைத்து உயிரினங்களினதும் வாழ்வியலை மிகக் கடுமையாக பாதிக்கும் என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இப்பாதிப்புகளை குறைப்பதற்கான வழிமுறைகள் சமூக பிரதேச மாற்றங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.    காலநிலை மாற்றத்தினை தணித்தல் மற்றும் அதனால் மனித வாழ்விற்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்குமான பல இலக்குகளில் நான்கு விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

1. காலநிலை தொடர்பான ஆபத்துக்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மீளும் திறன்¸ அவற்றுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனையும் வலுப்படுத்துதல்,

2. தேசிய கொள்கைகள்¸ நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடல் தொடர்பிலான காலநிலை மாற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்,

3. காலநிலை மாற்றத்தை தணித்தல்¸ தாக்கத்தினை குறைத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை என்பவை தொடர்பில் கல்வி¸ விழிப்புணர்வை ஏற்படுத்தல;,

4. காலநிலை மாற்றத்தை தணித்தல்¸ தாக்கத்தினை குறைப்பதற்கான  மனித மற்றும் நிறுவன ரீதியான திறனை  மேம்படுத்தப்படல்.

காலநிலை மாற்றங்களினால் விவசாயத் துறை மற்றும் மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ளவும்¸ உணவு உற்பத்தியிலும்¸ உணவுப் பாதுகாப்பிலும் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கும் சரியான நேரத்தில் நடவடிக்கைகள் தேசிய¸ மாகாண¸ மாவட்ட¸ உள்ளுராட்சி அதிகார மட்டங்களில; கலந்துரையாடப்பட்டு மிகச் சிறியளவிளான திட்;டங்களிலிருந்து அமுல்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

உதாரணமாக மாற்றமடையும் காலநிலை வடிவம்¸ போக்குகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறனான நீர் பாவனை தொழில்நுட்பங்களும்¸ நடத்தைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும். கடந்த மாதத்திலிருந்து இன்று வரை நாம் நமது வீடுகளில் நீர் பற்றாக்குறையை உணர்கிறோம். அதிக மழைவீழ்ச்சி நேரங்களில் பெறும் அதிகரித்த நீரை சரியாக சேமிக்க, முகாமைத்துவம் செய்ய முடியாமல் விரயமாக்குகிறோம். ஆனால் நீர் தேவைப்படும் காலங்களில் வரட்சியினால் நீர்;தேக்கங்கள் வற்றி நாம் பெறும் நீருக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்படுகின்றது. கிராமப்புறங்களில் நீரில்லாமல் மக்கள் படும் கஸ்டங்கள் நகர்புறங்களில் ஏற்படும் நாட்கள் தொலைவிலில்லை. நாட்டின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்ட மழை நீரை சேகரிக்கும் திட்டங்கள் சரியான முகாமைத்துவமின்றி தோல்வியடைந்துள்ளன.

உலகிலே காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத எந்த இடமும் இல்லை என்று கூறுமளவிற்கு அதன் தாக்கம் பாரியது, உலகலாவியது. இலங்கையைப் பொருத்த வரையில் அண்மையில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட கணிப்பீட்டு அறிக்கையின் படி2050ல் பத்து இலங்கையர்களில் ஒன்பது பேர் அதாவது 90 வீதமானோர் தீவிர காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அதிகூடிய தாக்கத்திற்கு உட்படக்கூடியவர்களாக காணப்படுவர். குறிப்பாக வருடம் தோறும் வெள்ளம், நிலச்சரிவு, வரட்சி மற்றும் அதிக உஸ்னத்தினால் ஏற்படும் தாக்கங்களுக்கு பாதிக்கப்படக்கூடியவர்களாக காணப்படுவர். கடந்த காலங்களில் விவசாயிகள் மழை, வரட்சி காலங்களை துல்லியமாக அறிந்து தமது விவசாய நடவடிக்கைகளை திட்டமிடுவார்கள். கடந்த காலங்களில் சரியாக நாட்களை கணிப்பிட்டு விவசாயம் செய்தவர்கள், இன்றைய காலப்பிரிவில் எப்போது தேவையானளவு மழை கிடைக்கும் எதிர்பார்க்கிறார்களோ அக்காலப்பகுதியில் வரட்சி காணப்படுவதாகும், மழை வீழ்ச்சிக்காலத்தினை கடந்த காலங்களைப்போன்று சரியாக அணுமானிக்க முடியாமல் இருப்பதாகவும் சொல்வதை நாம் காண்கிறோம்.

எனவே சமூக மட்ட நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான பணிகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எமது கிராமங்கள், நகரங்களில் காணப்படும் சமூக, சமய நிறுவனங்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் உள்ளுராட்சி சபைகளுடன் இணைந்து அதிக வெப்பம், மழை, வரட்சி போன்ற பாதிப்புக்களை குறைப்பதற்கான செயற்திட்டங்களை எமது வருடாந்த அபிவிருத்தி திட்டங்களுடன் இணைத்து செயற்படுத்த வேண்டும். குறிப்பாக நமது அரச சார்பற்ற நிறுவனங்களும், சமய சார் நிறுவனங்களும் – பள்ளிவாசல்கள் உள்ளடங்கலாக, ஒர் அனர்த்தம் ஏற்பட்ட பிறகே எமது கவனத்தை இவ்விடயங்களில் செலுத்துகிறோம். அனர்த்தங்களினால் பல உயிர்களும் பொருளாதாரமும் அழிக்கப்பட்ட பின்னர் நாம் செய்யும் உதவிகளை விட அதற்கு முன் அவற்றின் பாதிப்புக்களை குறைக்க செய்யும் உதவிகள், அனர்;த்தங்களின் பின்னர் ஏற்படும் செலவீனங்களை, எமது நேரம் வளங்களின் பயன்பாடு என்பவற்றை, பெருமளவில் குறைக்கக்கூடும். கடந்த கால அனுபவங்கள் இதற்கு சான்றாகும். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பெற்ற படிப்பினைகளை நடைமுறைப்படுத்தி, அடுத்த சந்ததிக்காவது ஆகக்குறைந்தது நமது வளங்களையும் வாய்ப்புக்களையும் விட்டுச்செல்ல வேண்டும். சிறிய சிறிய விடயங்களில் விடும் தவறுகள் சிலவேளை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவது போல், சிறிய சிறிய விடயங்களின் மூலம் பாரிய மாற்றங்களை கொண்டுவரமுடியும் என்பதை நாமும் நம் சமூகமும் உதாரணமாக மாற முன்வர வேண்டும். நாளாந்தம் சமூக, சமய, அரசியல் ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துவரும் இக்காலத்தில், தூரநோக்கான சிந்தனைகளும் சிறிய நன்மை தரும் செயற்பாடுகளும் எப்போதும் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையை சமூகத்திற்கு சொல்லிலும் செயலிலும் காட்டக்கூடிய சமூக, சமய, அரசியல் தலைவர்களை முன்னிறுத்த வேண்டியது  அவசியமானதும் அவசரமானதுமாகும்.